உ | கணபதிதுணை | இரண்டாம் பதிப்பின் முகவுரை | யாழ்ப்பாணம், ராவ்பகதூர், ஸ்ரீமாந் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பதித்த தொல்-எழுத்ததிகாரப் பதிப்பின்படி, 1937-ம் ஆண்டிலே யாமெழுதிய உரைவிளக்கக் குறிப்புக்களுடனும், ஏட்டுப் பிரதிகளை நோக்கி யாந் திருத்திய பல திருத்தங்களுடனும், இவ்வெழுத்ததிகாரத்தின் முதற்பதிப்பு, 'ஈழகேசரி' அதிபர் ஸ்ரீமாந் நா. பொன்னையபிள்ளை அவர்களாற் பதிப்பிக்கப்பட்டது. பொன்னையபிள்ளை அவர்கள் விகிர்தி வருடம் பங்குனிமாதத்தில் தேகவியோகமடைந்தபடியால், இதன் இரண்டாம்பதிப்பு, பொன்னையபிள்ளை மீனாட்சியம்மையாராற் பதிப்பிக்கப்பட்டது. | முதற் பதிப்பிலே நேர்ந்த பல பிழைகள் இப்பதிப்பிலே திருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் அச்சுப் பிழைகள் வாராவண்ணம் அச்சுத் தாள்களைப் பார்த்து உதவிய பண்டிதர், ஸ்ரீமாந் வ. நடராசபிள்ளை அவர்களுக்கும், ஸ்ரீமாந் மு. சபாரத்தினம்பி்ள்ளை அவர்களுக்கும் எமது அன்பும் நன்றியும் உரியதாகுக. | இவ்விரண்டாம் பதிப்பிலே முன் திருத்திய திருத்தங்களை விடப், பின்னும் சில திருத்தங்கள் கீழ்க்குறிப்பாகக் காட்டப்பட்டும், சில உரை விளக்கக் குறிப்புக்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவற்றை அங்கங்கே கண்டு கொள்க. | இந்நூல் தொல்காப்பியனாராற் செய்யப்பட்டு, இடைச் சங்கத்திலும் கடைச் சங்கத்திலும் நூலாக வழங்கியதென இறையனார் களவியலுரை கூறவும், அதனை விடுத்து, சங்கஞ் சார்ந்த நூலென்றும், கிறிஸ்துவுக்கு முன் 300 ஆண்டு வரையிற் செய்யப்பட்டதென்றும், கிறிஸ்துவுக்குப் பின் 200 ஆண்டு வரையிற் செய்யப்பட்டதென்றும், ஆங்கிலங் கற்ற நிபுணர்களும், ஆங்கிலமும் ஆரியமுங் கற்ற 1டாக்டர், P.S. சுப்பிர |
| 1. தொல் - எழுத்ததிகாரக் குறிப்புரை ஆசிரியர், |
|
|