நூன்மரபு51

14.

1உட்பெறு புள்ளி யுருவா கும்மே.
 

இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது.
 

மகரம் அதிகாரப்பட்டு நிற்றலின் ஈண்டுக் கூறினார்.
 

இதன் பொருள் : உட்பெறுபுள்ளி  - புறத்துப்  பெறும்  புள்ளியோடு
உள்ளாற்பெறும் புள்ளி, உருவாகும் - மகரத்திற்கு வடிவாம் என்றவாறு.
 

எனவே புறத்துப்  பெறும் புள்ளியாவது மேற்சூத்திரத்தான் மெய்கட்குக்
கூறும் புள்ளி. ஈண்டு 2உருவென்றது காட்சிப்பொருளை உணர்த்திநின்றது.
 

உதாரணம் : கப்பி (கம்மி) என வரும். இஃது எதிரது போற்றல்.
 

(14)
 

15.

மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்.
 

இது  தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் ஒப்புமைமேல் வேற்றுமைசெய்தல்
கூறுகின்றது. என்னை ? உயிர்மெய்யான  ககர ஙகரங்கட்குந் தனிமெய்யான
ககர  ஙகரங்கட்கும்  வடிவு  ஒன்றாக  எழுதினவற்றை  ஒன்றாக்குவதற்குப்
பின்பு புள்ளி பெறுகவென்றலின்.
 

இதன் பொருள் : மெய்யின்   இயற்கை   புள்ளியொடு  நிலையல் -
பதினெட்டு மெய்களின் தன்மையாவது புள்ளிபெற்று நிற்றலாம் என்றவாறு.
 

எனவே  உயிர்மெய்கட்குப் புள்ளியின்றாயிற்று. க்-ங்.....ற்-ன் என வரும்.
இவற்றைப்  புள்ளியிட்டுக்  காட்டவே புள்ளி பெறுவதற்கு முன்னர் அகரம்
உடனின்றதோர்   மெய்வடிவே  பெற்று   நின்றனவற்றைப்  பின்னர் அப்
புள்ளியிட்டுத்  தனி  மெய்யாக்கினா  ரென்பதூஉம்  பெறுதும். இதனானே
ககரம்  ஙகரம்  முதலியன  புள்ளிபெறுவதற்கு  முன்னர் இயல்பாக அகரம்
பெற்றே   நிற்குமென்பதூஉம்    புள்ளி   பெறுங்காலத்து    அவ்வகரம்
நீங்குமென்பதூஉம் பின்னர் அப்புள்ளி நீங்கி உயி


1. இதனை   மகரக்குறுக்கம்  புள்ளிபெறுதலை   விதிக்கவந்த  சூத்திர
மென்பாருமுளர்.
 

2. வரிவடிவைக் குறித்து நின்றது.