52நூன்மரபு

ரேறுமிடத்துத்   தன்கண்  1அகரம்  நீங்கியே போக வருகின்றதோர் உயிர்
யாதாயினும்  ஒன்று  ஏறி  நிற்குமென்பதூஉம்  பெற்றாம். 'மெய்யி னியக்க
மகரமொடு  சிவணும்' (எழு-46) என்னுஞ் சூத்திரத்தானும் இதுவே இதற்குக்
கருத்தாதல் உணர்க. 
 

(15)
 

16.

எகர ஒகரத் தியற்கையு மற்றே.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : எகர   ஒகரத்து   இயற்கையும்   அற்றே  -  எகர
ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளிபெறும் இயல்பிற்று என்றவாறு.
 

எனவே ஏகார ஓகாரங்கட்குப் புள்ளி யின்றாயிற்று.
 

எ-ஒ என வரும்.
 

இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும்.
 

மகரம் ஆராய்ச்சிப்பட்டது கண்டு மகரத்திற்கு வடிவு வேற்றுமை செய்து,
அதிகாரத்தான் மெய்யின் தன்மை கூறி, அதன் பின் 2மாட்டேற்றலின் எகர
ஒகரத்தையுங் கூறினார். 
 

(16)
 

17.

புள்ளி யில்லா வெல்லா மெய்யு
முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலு
மேனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலு
மாயீ ரியல வுயிர்த்த லாறே.
 

இது மெய்யும் உயிரும்  கூடிப் புணருமாறும் ஆண்டு அவை திரியாதுந்
திரிந்தும் நிற்குமாறுங் கூறுகின்றது.
 

இதன் பொருள் :புள்ளி   இல்லா   எல்லா   மெய்யும்  - உயிரைப்
பெறுதற்குப்   புள்ளியைப்   போக்கின எல்லா மெய்களும், உரு உருவாகி
அகரமோடு  உயிர்த்தலும் - புள்ளிபெறுகின்ற  காலத்து இயல்பாகிய அகர
நீங்கிய வடிவே தமக்கு வடிவாகி


1. அகரம்   நீங்கியே  போக  என்றது, அகரம்  மீளவும் வந்து ஏறாது
நீங்கிப்போக என்றபடி. எனவே வாராதொழிய என்பதாம்.
 

2. அற்று என்பது மாட்டேறு.