இதன் பொருள் :அம்மூவாறும் - அங்ஙனம் மூன்று கூறாகப் பகுத்த பதினெட்டு மெய்யும், வழங்கியல் மருங்கின் - வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் எழுத்துக்களைக் கூட்டி மொழிப்படுத்து வழங்குதல் உளதாமிடத்து, மெய் மயங்கும் நிலை - தனிமெய் தன்முன்னர் நின்ற பிறமெய்யோடுந் தன்மெய்யோடும் மயங்கும் நிலையும், உடன்மயங்கும் நிலை - அப்பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் நின்ற உயிர்மெய்யோடுந் தனிமெய்யோடும் மயங்கும் நிலையுமென இரண்டாம், தெரியுங்காலை - அவை மயங்கும் மொழியாந் தன்மை ஆராயுங்காலத்து என்றவாறு. |
எனவே, தனித்துநின்ற எழுத்துடன் முன்னின்ற எழுத்துக்கள் தாங் கூடுமாறு கூறினாராயிற்று. கட்க என்றால் இடை நின்ற தனிமெய் முன்னர் நின்ற தன்னின் வேறாய ககரவொற்றோடு மயங்கிற்று. காக்கை என்றால் இடைநின்ற ககரவொற்று முன்னர் நின்ற தன்னொற்றோடு மயங்கிற்று. கரு என ஈரெழுத் தொருமொழியுங் கருது என மூவெழுத் தொரு மொழியும் உயிர்மெய் நின்று தன்முன்னர் நின்ற உயிர்மெய்யோடு மயங்கிற்று. துணங்கை என உயிர்மெய் நின்று தன் முன்னர் நின்ற தனிமெய்யோடு மயங்கிற்று. கல் வில் என உயிர்மெய் நின்று தனிமெய்யோடு மயங்கிற்று. |
தெரியுங்காலை என்றதனான் உயிர் முன்னர் உயிர்மெய்ம் மயக்கமும் உயிர் முன்னர்த் தனிமெய்ம்மயக்கமுங் கொள்க. அவை, அளை ஆம்பல் என்றாற்போல்வன. |
மெய்ம்மயக்கங்களுள் தனிமெய்முன்னர்ப் பிறமெய்நின்று மயங்குதல் பலவாதலிற் பல சூத்திரத்தாற் கூறித், தன் முன்னர்த் தான் வந்து மயங்குதலை ஒரு சூத்திரத்தாற் கூறுப. அவை மயங்குங்கால் வல்லினத்தில் டகரமும் றகரமும் மெல்லினமாறும் இடையினமாறும் பிறமெய்யோடு மயங்கு |
|
மெய்ம்மயக்கமென்றும் உடனிலை மயக்கமென்றும் இருவகைய; அவை மயங்குமுறை யாராயுங்காலத்து என்று கூறி மெய்ம்மயக்மென்பதற்கு வேற்றுநிலை மெய்ம்மயக்க மென்றும் உடனிலை மயக்கமென்பதற்குத் தன்னொடுதான் மயங்குதலென்றும் பொருள்கொண்டனர். நச்சினார்க்கினியர் 'மெய்ம்மயங் குடனிலை' என்பதை மெய்ம்மயங்கு நிலை உடன்மயங்கு நிலை எனக் கொண்டு உடன்மயங்கு நிலை |