மென்றும் வல்லினத்திற் கசதபக்கள் தன் மெய்யோடன்றிப் பிறமெய்யோடு மயங்காவென்றும் உய்த்துணரக் கூறுமாறு உணர்க. |
மூவாறு மென்னும் உம்மை முற்றும்மை. |
இச் சூத்திரம் முதலாக 'மெய்ந்நிலை சுட்டின்' (எழு-30) 1ஈறாக மேற்கூறும் மொழிமரபிற்குப் பொருந்திய கருவி கூறுகின்றதென் றுணர்க ; எழுத்துக்கள் தம்மிற் கூடிப் புணருமாற கூறுகின்றதாதலின். |
(22) |
23. | ட ற ல ள வென்னும் புள்ளி முன்னர்க் க ச ப வென்னு மூவெழுத் துரிய. |
|
இது தனிமெய் பிறமெய்யோடு மயங்கும் மயக்கம் உணர்த்துகின்றது. |
இதன் பொருள் : ட ற ல ள என்னும் புள்ளிமுன்னர் - மொழியிடை நின்ற ட ற ல ள என்று கூறப்படும் நான்கு புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூவெழுத்து உரிய - க ச ப என்று கூறப்படும் மூன்றெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய என்றவாறு. |
உதாரணம் : கட்க கட்சி கட்ப எனவுங் கற்க முயற்சி கற்ப எனவுஞ் செல்க வல்சி செல்ப எனவுங் கொள்க. நீள் சினை கொள்ப எனவுந் தனிமெய் பிறமெய்யோடு மயங்கியவாறு காண்க. கட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலின் ஈண்டைக்காகா. |
(23) |
|
என்பதற்கு மெய்கள் உயிருடன் கூடிநின்று உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமென்று பொருள் கூறினர். |
உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு அவர் கூறிய பொருளின்படி உயிர்மெய் உயிர்மெய்யோடு மயங்குமிடத்துக் கரு என மயங்கும். ஆண்டுக் ககரத்திலுள்ள அகரமும் ரு என்னும் எழுத்திலுள்ள ரகரமும் மயங்கியதன்றிக் ககர அகரமும் ரகர உகரமும் மயங்கியதின்றாம். ஏனெனின் 'மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே' என்பது விதியாகலின். ஆதலின், உரையாசிரியர் கருத்தே பொருத்தமாமென்க. நன்னூலார் கருத்து மிதுவேயாம். |
1. ஈறாகக் கூறுகின்றதென் றுணர்க என முடிக்க. |