60நூன்மரபு

இனி 1உரையாசிரியர்  உரிஞ்யாது  பொருந்யாது  திரும்யாது தெவ்யாது
என   இருமொழிக்கண்  வருவன   உதாரணமாகக்   காட்டினாராலெனின்,
ஆசிரியர்   ஒருமொழியாமாறு   ஈண்டுக்கூறி,  இருமொழி  புணர்த்தற்குப்
புணரியலென்று  வேறோர்  இயலுங்கூறி, அதன்கண் 'மெய்யிறு சொன்முன்
மெய்வருவழியும்' (எழு - 107) என்று கூறினார். கூறிப் பின்னும் 'உகரமொடு
புணரும்  புள்ளி  யிறுதி' (எழு - 163)  என்றும்  பிறாண்டும் ஈறுகடோறும்
எடுத்தோதிப் புணர்ப்பர்.  ஆதலின் ஈண்டு இருமொழிப்புணர்ச்சி  காட்டிற்
கூறியதுகூற   லென்னுங்   குற்றமாம்.   அதனால்    அவை   காட்டுதல்
பொருந்தாமை உணர்க. 
 

(27)
 

28.

மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : மஃகான் புள்ளிமுன் - முற்கூறியவற்றுள் மகரமாகிய
புள்ளி  முன்னர், வவ்வுந் தோன்றும் - பகர யகரமேயன்றி வகரமும் வந்து
மயங்கும் என்றவாறு.
 

இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன்
என்றாற்போல்வன காட்டின் 'வகார மிசையு மகாரங் குறுகும்' (எழு - 330)
என்ற விதி வேண்டாவாம். 
 

(28)
 

29.

யரழ வென்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : யரழவென்னும்  புள்ளிமுன்னர்  -  ய ர ழ  என்று
கூறப்படும் மூன்று  புள்ளிகளின்  முன்னர், முதலாகெழுத்தும் - மொழிக்கு
முதலாமென மேற்கூறும் ஒன்ப


1. இருமொழிப்புணர்ச்சி      காட்டின்     கூறியது     கூறலென்னும்
குற்றமாமென்று   நச்சினார்க்கினியர்   கூறுதல்   பொருந்தாது.  ஏனெனில்
மயக்கம்  வேறு  புணர்ச்சி வேறாகலின். வேறாமாற்றை,  மயக்கமுள்ளனவும்
இயல்பாதலன்றித் திரிந்தும் மயக்கமில்லாதன மயக்கமுள்ளனவாகத் திரிந்தும்
புணர்தலானறிக.
 

பொன்குடம் - பொற்குடம். இது  மயக்கமுள்ளன  திரிந்தன. கல்தீது -
கற்றீது. இது மயக்கமில்லாதன திரிந்து புணர்ந்தன.