நூன்மரபு61

தெழுத்துக்களும்,  உம்மையான் மொழிக்கு முதலாகாத பிற எழுத்துக்களும்,
ஙகரமொடு தோன்றும் - ஙகாரமும் வந்து மயங்கும் என்றவாறு.
 

உதாரணம் : ஆய்க ஆர்க ஆழ்க, ஆய்தல் ஆர்தல் ஆழ்தல்,ஆய்நர்
ஆர்நர், ஆழ்நர், ஆய்பவை  ஆர்பவை  ஆழ்பவை,  வாய்மை  நேர்மை
கீழ்மை, எய்சிலை   வார்சிலை  வாழ்சேரி,  தெய்வம்  சேர்வது  வாழ்வது,
பாய்ஞெகிழி நேர்ஞெகிழி வாழ்ஞெண்டு, செய்யாறு போர்யானை வீழ்யானை
என  மொழிக்கு  முதலாம்  ஒன்பதும்  வந்து  மயங்கின.  செய்யாறு என
யகரத்தின் முன்னர் யகரம் வந்தது தன்முன்னர்த் தான் வந்ததாம்.
 

இனி  உம்மையாற்கொண்ட மொழிக்கு முதலாகாதவற்றின்கண்ணுஞ் சில
காட்டுதும்: 1ஓய்வு  சோர்வு  வாழ்வு,  ஓய்வோர் சோர்வோர்  வாழ்வோர்,
ஆய்ஞர்  சேர்ஞர்  ஆழ்ஞர்  என வரும். பிற எழுத்துக்களோடு வருவன
உளவேனும் வழக்குஞ் செய்யுளும் நோக்கிக் கூறிக்கொள்க.
 

இனி   வேய்ங்ஙனம்   வேர்ங்ஙனம்  வேழ்ங்ஙனம்  என   மொழிக்கு
முதலாகாத   ஙகரம்   இடைவந்த   சொற்கள்   அக்காலத்து   வழங்கின
என்றுணர்க,  ஆசிரியர்  ஓதுதலின். இதனை 'ஙகரமொடு தோன்றும்' எனப்
பிரித்தோதினார் அக்காலத்தும் அரிதாக வழங்கலின்.
 

இனி  வேய்கடிது  வேர்கடிது  வீழ்கடிது  சிறிது  தீது பெரிது ஞான்றது
நீண்டது  மாண்டது  யாது வலிது என்பன காட்டின் அவை இருமொழியாக
நிலைமொழி  வருமொழி  செய்து  மேற்புணர்க்கின்றன ஈண்டைக்காகா என
மறுக்க.
 

(29)
 

30.

மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந்
தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே.
 

இது   நிறுத்தமுறையானே  தனிமெய்   தன்னொற்றோடு  மயங்குமாறு
கூறுகின்றது. 


1. ஓய்வு, ஓர்வு  என்பனவற்றின்  வகர உகரமும்  ஒவ்வோர் என்பதில்
வகர  ஓகாரமும் ஆய்ஞர்  என்பதில் ஞகர அகரமும் மொழிக்கு முதலாகா
எழுத்துக்கள். அவை  யரழ  என்னும்  மூன்றோடும்  மயங்கி வந்தமைக்கு
ஈண்டு உதாரணமாகக் காட்டப்பட்டன.