இதன் பொருள் : அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் நரம்பின் மறைய என்மனார் புலவர் - முற்கூறிய உயிரும் உயிர்மெய்யும் மாத்திரையை இறந்தொலித்தலும் ஒற்றெழுத்துக்கள் அரைமாத்திரையின் நீண்டொலித்தலும் யாழ் நூலிடத்தன என்று கூறுவர் புலவர், இசையொடு சிவணிய உளவென மொழிப - அங்ஙனம் அளபிறந்தும் நீண்டும் இசைத்தல் ஓசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்களுக்கும் உளவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையை 1இறந்தொலிக்குமாறு கண்டு, அஃது இறந்தொலிக்கும் இடங் கூறினார், எழுத்துஞ் சொல்லும் பொருளுங் கிடக்கும் இடஞ் செய்யுளிடமாதலின். அது மிக்கொலித்தலைச் செய்யுளியலின்கண் 'மாத்திரையெழுத்திய லசைவகையெனாஅ' (செய் - 1) என இருபத்தாறு உறுப்பிற்குஞ் சிறப்புறுப்பாக முற்கூறிப், பின்னர் |
'மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர்.' |
(செய் - 2) |
என இச் சூத்திரத்தோடு மாட்டெறிந்து, பின்னும் |
'எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப.' |
(செய் - 43) |
என்றுங் கூறினார். 2இது எதிரதுபோற்றலென்னும் உத்தியுங் கூறிற்று. |
உதாரணம் : 'வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பன்யான் கேஎளினி' (கலி - 11) என்புழி ழகர ஆகாரமும் ககர ஏகாரமும் மாத்திரை இறந்தொலித்தவாறு உணர்க. 'பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே' (கலி - 11) என்புழி ஙகரவொற்று அளவிறந்தவாறு காண்க. ஒழிந்த மூவகைச் செய்யுட்கும் இவ்வாறே தத்தமக்குரிய பாவென்னும் உறுப்பினை நடாத்தி அளவு மிகுமாறு காண்க. |
சிவணிய என்பது 3தொழிற்பெயர். இசையொடு சிவணிய எனவே செய்யுளாதல் பெற்றாம். நரம்பென்றது ஆகுபெய |
|
1. இறந்து - கடந்து. |
2. இது - இச் சூத்திரம். |
3. தொழிற்பெயர் - வினையாலணையும் பெயர். |