நூன்மரபு65

ராய்  யாழினை  உணர்த்திற்று.  மறையென்றது  நூலை. மொழிபவென்றும்
என்மனார்  புலவரென்றும்  இருகாற்  கூறியவதனால்,  இங்ஙனம் பொருள்
கூறலே  ஆசிரியர்க்குக்  கருத்தாயிற்று.  என்னை ? செய்யுளியலுட் கூறிய
'மாத்திரையளவும்'  என்னுஞ்  சூத்திரத்தில்  'மேற்கிளந்தன்ன' (செய் - 2)
என்னும்  மாட்டேற்றிற்கு இவ்வோத்தினுள் வேறோர் சூத்திரம்இன்மையின்.
இவ்  விலக்கணங்  கூறாக்காற்  செய்யுட்குப் பாவென்னும் உறுப்பு நிகழாது
அவை  உரைச்செய்யுட்போல   நிற்றலின்   இவ்   விலக்கணங்  கூறவே
வேண்டுமென்று உணர்க.
 

'சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற
வின்றி யமையா தியைபவை யெல்லா
மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே.' 

(மரபியல் - 103)
 

என்னும்   மரபியற்   சூத்திரத்தானே   இவ்வாறே  சூத்திரங்களை நலிந்து
பொருளுரைப்பன வெல்லாங் கொள்க.
 

(33)
 

நூன்மரபு முற்றிற்று.