66மொழிமரபு

2. மொழிமரபு
 

34.

குற்றிய லிகர நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வரூஉ மகர மூர்ந்தே.
 

என்பது  சூத்திரம். மேல்  எழுத்து  உணர்த்திப்  பின்னர் அவை தம்முட்
தொடருமாறும்    உணர்த்தி    அவ்வெழுத்தானாம்   மொழியது   மரபு
உணர்த்துகின்றமையின்    இவ்வோத்து     மொழிமரபெனக்    காரணப்
பெயர்த்தாயிற்று.  இச் சூத்திரம்  முன்னர்ச் சார்ந்து வருமென்ற மூன்றனுட்
குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடுங் கூறுகின்றது.
 

இதன் பொருள் : 1உரையசைச்  கிளவிக்கு  வரூஉம்  -  தான் கூறும்
பொருளைக்   கோடற்கு   ஒருவனை   எதிர்முகமாக்குஞ்   சொல்லிற்குப்
பொருந்தவரும்,  ஆவயின்  -  அம்  மியாவென்னும்   இடைச்சொல்லைச்
சொல்லுமிடத்து,  யாவென்  சினைமிசை  மகரம்  ஊர்ந்து -  யாவென்னும்
உறுப்பின்  மேலதாய் முதலாய் நின்ற மகரவொற்றினை யேறி, குற்றியலிகரம்
நிற்றல்   வேண்டும்  -  குற்றியலிகரம்  நிற்றலை   விரும்பும்  ஆசிரியன்
என்றவாறு.
 

உதாரணம் : கேண்மியா   சென்மியா   என   வரும்.   கேளென்றது
உரையசைக்கிளவி;  அதனைச்  சார்ந்து   தனக்கு   இயல்பின்றி  நின்றது
மியாவென்னும்   இடைச்சொல்.   அவ்  விடைச்சொல்  முதலும் அதனிற்
பிரியும் யா அதற்கு உறுப்புமா


1. உரையசைக் கிளவி என்பதற்குத் தான் கூறும் பொருளைக் கோடற்கு
ஒருவனை   எதிர்முகமாக்குஞ்  சொல்   என்றும்,  அது  கேள்  என்றும்
நச்சினார்க்கினியர்    கூறுகின்றார்.    அசைத்தல்   -   எதிர்முகமாக்கல்.
அங்ஙனமாயின் சென்மியா என்புழிச் சொல் என்பதற்கு அது பொருந்தாமல்
வருகின்றது.  ஆதலின்    உரையசைக்கிளவி   என்பதற்கு   உரையசைச்
செல்லாகிய   மியா   என்று   உரையாசிரியர்   கொள்ளும்   பொருளே
பொருத்தமாகின்றது.   நன்னூலாரும்   இவ்வாறே கொள்வர். உரையசை -
கட்டுரைக்கண்  அசைநிலையாய்  வருவது.  கட்டுரை - வாக்கியம். 'ஆங்க
உரையசை'   யென்பர்  பின்னும்.  அச்  சூத்திரத்திலே  உரை என்பதற்கு
நச்சினார்க்கினியர் கட்டுரை என்பர். ஆண்டு என்றது நூன்மரபை.