மென்று கருதி யாவென்சினை என்றார். மியா இடம் ; மகரம் பற்றுக்கோடு. யாவும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு. இவ் விடைச்சொல் தனித்து நிற்றல் ஆற்றாமையிற் கேளென்பதனோடுசார்ந்து ஒரு சொல்லாயே நின்றுழி இடை நின்ற இகரம் ஒருமொழியிடத்துக் குற்றியலிகரமாய் வருதலானும் ஆண்டு உணர்த்தற்குச் சிறப்பின்மையானும் ஈண்டுப் போத்தந்து கூறினார். ஊர்ந்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம், உயிர்க்கல்லது ஏறுதலின்மையின். |
(1) |
35. | புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே யுணரக் கூறின் 1முன்னர்த் தோன்றும். |
|
இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென்கின்றது. |
இதன் பொருள் : புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே - அக் குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணன்றி இருமொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைமைக்கண்ணுங் குறுகுதலுரித்து, உணரக்கூறின் முன்னர்த்தோன்றும் - அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத்தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும் என்றவாறு. |
குறுகலுமென்னுமிடத்து உம்மையை நிலையிடையுமென மாறிக் கூட்டுக. 'யகரம் வருவழி' (எழு - 410) என்னுஞ் சூத்திரத்து யகரம் இடம், உகரஞ் சார்ந்த வல்லெழுத்துப் பற்றக்கோடு. |
உதாரணம் ;நாகியாது வரகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது குரங்கியாது என வரும். இது மொழிவாமென்னும் உத்தி. |
(2) |
36. | நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. |
|
இஃது ஒருமொழிக் குற்றியலுகரத்துக்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துகின்றது. |
|
1. முன்னர் என்றது குற்றியலுகரப் புணரியலை. ஆண்டு 5 - ம் சூத்திரம் நோக்குக. சிறப்பின்மை - சிறந்த எழுத்தல்லாமை. |