மொழிமரபு75

45.

ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி
யிரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.
 

முன்னர்   மெய்ம்மயக்கம்   உடனிலைமயக்கங்   கூறலானும்   ஈண்டு
'நெட்டெழுத்   தேழே'   (எழு  -  43)    என்பதனானும்  எழுத்தினான்
மொழியாமாறு  கூறினார்.  அம்  மொழிக்கு   இச்சூத்திரத்தாற்   பெயரும்
முறையுந் தொகையுங் கூறுகின்றார்.
 

இதன் பொருள் : ஓரெழுத்தொருமொழி        ஈரெழுத்தொருமொழி
இரண்டிறந்து  இசைக்குந்  தொடர்மொழி  உளப்பட -  ஓரெழுத்தானாகும்
ஒருமொழியும்  இரண்டெழுத்தானாகும்  ஒருமொழியும் இரண்டனை இறந்து
பலவாற்றான் இசைக்குந் தொடர்மொழியுடனே கூட, மொழிநிலை மூன்றே -
மொழிகளின்   நிலைமை  மூன்றேயாம்.  தோன்றிய  நெறியே  -  அவை
தோன்றிய வழக்குநெறிக்கண் என்றவாறு.
 

உதாரணம் : ஆ,  கா,  நா   ஓரெழுத்தொருமொழி,   மணி,   வரகு,
கொற்றன்   ஈரெழுத்தொருமொழி,  குரவு  அரவு   மூவெழுத்தொருமொழி,
கணவிரி   நாலெழுத்தொருமொழி,  அகத்தியனார்   ஐயெழுத்தொருமொழி,
திருச்சிற்றம்பலம்       ஆறெழுத்தொருமொழி,      பெரும்பற்றப்புலியூர்
ஏழெழுத்தொருமொழி.
 

1ஓரெழுத்தொருமொழியுந்        தொடர்மொழியு         மென்னாது
ஈரெழுத்தொருமொழியும் ஓதினார், சில பல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி.


1. இங்கே ஈரெழுத்தொருமொழி தொடர்மொழி என்று வகுத்தது சில பல
என்னும்  தமிழ்  வழக்கு  நோக்கி யென்று கூறுவதிலும், வடமொழி வழக்கு
நோக்கியென்று   கூறுதலே    பொருத்தமாகும்.   நன்னூல்  விருத்திகாரர்
அங்ஙனமே  கூறுவர்.   இங்கே   நச்சினார்க்கினியர்    செய்யுளியலோடு
மாறுபடாவண்ணம்  ஓரெழுத்துமொழி ஈரெழுத்துமொழி தொடர்மொழிகளை
ற்றெழுத்துத்   தள்ளிக்கொள்ளவேண்டுமென்றல்   பொருந்தாது. ஏனெனின்
மாத்திரை  பற்றி   அசை   வகுத்தலாற்   செய்யுளியலில்    ஒற்றெழுத்து
முதலியவற்றை  ஆசிரியர்  தள்ளுகின்றா ராதலானும், ஈண்டு எழுத்துப்பற்றி
ஆசிரியர்  ஓரெழுத்துமொழி  முதலியவற்றை  வகுத்துக்கூறுகின்றாராதலானு
மென்பது. அன்றியும் புணர்ச்சி கூறும் இயல்களின்