வேண்டியவாறே வருமென்று உணர்க. அன்றியுங் குற்றொற்றென்றே சூத்திரஞ் செய்தலிற் குறிலிணை யொற்றினைக் காட்டிக் கடாவலாகாமை உணர்க. இது வரையறையின்றி உயிர்மெய்யோடு தனிமெய் மயங்குவனவற்றிற் சில வொற்றிற்கு வரையறை ஈண்டுக் கூறியது. |
(16) |
50. | குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல. |
|
இஃது 'அளபிறந் துயிர்த்தலும்' (எழு - 33) என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது; என்னை? உயிரும் உயிர்மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயம் அறுத்தலின். |
இதன் பொருள்: குறுமையும் நெடுமையும் - 1எழுத்துக்களது குறியதன்மையும் நெடியதன்மையும், அளவிற் கோடலின் - மாத்திரையென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், தொடர்மொழியெல்லாம் - அம்மாத்திரை தம்முட்டொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத்தியல - நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம் என்றவாறு. |
உதாரணம்: 'வருவர்கொல் வயங்கிழாஅய்' (கலி 11) எனவும், 'கடியவேகனங்குழாஅய்' (கலி - 11) எனவுங் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்தற்குக் கூடியவாறு உணர்க. ஏனைச்செய்யுட்களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக்குங்கால் நெட்டெழுத்தே |
|
1. இதற்கு நச்சினார்க்கினியர் எழுத்துக்களது குறியதன்மையும், நெடியதன்மையும், மாத்திரை என்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், அம் மாத்திரை தம்முட்டொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத்தை மாத்திரை மிகுதற்குத் தொடர்ந்த சொல்லாம் என்று பொருள் கூறி நெட்டெழுத்துக்களை |