நிறுத்த முறையானே உயர்திணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட பெயரிடத்து அவன் முதலாகிய சுட்டுப்பெயர் ஒன்பதும், யான் முதலாகிய தன்மைப் பெயர் மூன்றும், யாவன் முதலாகிய வினாவின் பெயர் மூன்றும், ஆய அப் பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ - று. யான் என்பது ஒருமை உணர நின்றது. (8) இதுவுமது | 159. | ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த இகர இறுதியும் நம்மூர்ந்து வரூஉம் இகரவை காரமும் முறைமை சுட்டா மகனும் மகளும் மாந்தர் மக்கள் என்னும் பெயரும் ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும் சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும் அவைமுத லாகிய 1பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பதி னைந்தும் அவற்றோ ரன்ன. |
இதுவுமது. இ - ள். ஆண்மை அடுத்த மகன் என்பது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ - று. ‘ஆண்மை அடுத்த மகன்’ என்பது ஆண்மகன். ‘பெண்மை அடுத்த மகள்’ என்பது பெண்மகள். ‘பெண்மை அடுத்த இகர இறுதி’ பெண்டாட்டி. இகர இறுதியை யுடையது இறுதி என்றாயிற்று. இவ்வுரை நம்பி. நங்கை என்பனவற்றிற்கும் ஒக்கும். ‘நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரம்’ என்பது நம்பி, நங்கை என்பன. ‘முறைமை சுட்டா மகனும் மகளும்’ என்பது முறைப் பெயரைக் குறியாது உயர்திணைப் பொருட்குப் பெயராகி மகன் மகள் என வரும். மாந்தர், மக்கள் என்னும் பெயராவன மாந்தர் மக்கள் எனப் பொருட் பன்மை உணர வருவன. ‘ஆடூஉ, மகடூஉ வாயிரு பெயரும்’ என்பது--‘ஆடூஉ, மகடூஉ என்பன. ‘சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் ஆவது’ சுட்டெழுத்தை முதலாகவுடைய அன் ஆன் என்னும் சொல்லீறாகி வருவன. அது சினையிற் கூறும்
1. ‘பெண்டன் கிளவி’ என்ற பாடமும் இருப்பதாகச் சேனாவரையர் உரையிலிருந்து தெரிகிறது.
|