[வினையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்109

109

6. வினையியல்

வினைச் சொற்குப் பொது விலக்கணம்

192.வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வினையியல் என்னும் பெயர்த்து: வினைச் சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். நிறுத்த முறையானே பெயர் இலக்கணங் கூறி, அதன்பின் வினையிலக்கணங் கூறவேண்டுதலின், அதன்பிற் கூறப்பட்டது.

இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், வினைச்சொல்

இலக்கணம் பொது வகையான் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினை என்று சொல்லப்படுவது வேற்றுமை உருபு ஏலாது; காலத்தோடு தோன்றும்; ஆராயும் காலத்து, எ - று.

வினை என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமை கொண்டு நிற்பதும் ஒருநிலை உண்டு. அந்நிலை ஒழியக், காலத்தோடு பொருந்தி நிற்குமது நம்மால் வினைச்சொல்லென வேண்டப்பட்டது, எ - று.

எ - டு. அஃதாவது உண்டலைச் செய்தான் என்பது ஈண்டுத்தின்றான் எனக் காலத்தோடு ஒட்டி நிற்பது.

(1)

காலம் மூன்று

193.காலந் தாமே மூன்றென மொழிப.

காலத்துக்குத் தொகை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட காலத்தாம் மூன்று என்று சொல்லுவார் ஆசிரியர், எ - று.

அதன் வகை வரும் சூத்திரத்துக் கூறுப.

(2)

காலத்தின் பெயர்

194.இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே.

காலத்திற்கு வகையும் அதற்கு உரியதோர் இலக்கணமும்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என அம்முக்காலமும்