காட்டும். 1செய்யா யென்னும் வினையெஞ்சு கிளவியும் என எழுத்ததிகாரத் தோதுதலின், அவ்வாய்பாடும் இப்பொருட்டாகி வருதலின் அதுவுங்கொள்க. செய்பு என்பது மூன்று காலமுங் காட்டும். செய்தன என்பது இறந்த காலப் பொருட்டாயினும் விரைவு குறித்தலானும், திரிந்து முடிதலானும் பொருள் வேறுபாடு உடைத்தாதலான் வேறோதப் பட்டது. செய்யியர் என்பது எதிர்காலங் காட்டும். செய்யிய என்பது வாய்பாடு வேற்றுமை யுடைத்தாதலான் பொருள் நோக்காது சொல் நோக்கிக் கூறப்பட்டது. செயின் என்பது எதிர்காலம் பற்றி வரினும் பொருள் வேறுபாடுடைத்தாதலான் வேறோதப் பட்டது. செய என்பது மூன்று காலத்திற்கும் பொதுவாகிப் பொருள் வேறுபாடு உடைத்து. செயற்கு என்பது எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை குறித்து ஓதப்பட்டது. உதாரணம் வருகின்ற சூத்திரங்களுட் காட்டுதும். (31) வினையெச்ச ஈறுகள் | 223. | பின்முன் கால்கடை வழியிடத் தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியும் அவற்றியல் பினவே. |
இதுவும் வினையெச்ச வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பின் முதலாக ஓதப்பட்டனவும், அத்தன்மையவாகிய மரபினாற் காலங் குறித்து வரும் எல்லாச் சொல்லும் வினையெச்ச இயல்பின, எ - று. எனவே, மேற் சொல்லப்பட்டவற்றோடு ஒரு நீர்மைய அல்ல என்பது பெறப்பட்டது. அன்ன மரபினாற் கொள்ளப்படுவன உம், மற், மை, கிற், இன்றி, அன்று, இனிக்கொண்டான், நனிவந்தான் என வருவனவும், பிறவும். இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (32) செய்து, செய்யூ, செய்பு என்பவற்றிற்கு முடிபு | 224. | அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. |
நிறுத்த முறையானே முந்துற்ற மூன்றிற்கும் முடிபுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் முந்துற்ற மூன்று சொல்லும் அவ்வினைக்குக் கருத்தாவாகிய பொருளின் வினையை முடிபாக உடைய, எ - று. எ - டு. உண்டு வந்தான்--இது செய்தென் எச்சம். 2படுமகன் கிடக்கை காணூஉ--வீன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. இஃது இறந்த காலங் குறித்த செய்யூ என்னும் வினையெச்சம். நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு
1. உயிர் மயங்கியல்-20. 2. புறம்.-278.
|