126தொல்காப்பியம்[வினையியல்]

126

குஞ்சரம்--இது நிகழ்காலம் குறித்த செய்யூ என்னும் வினையெச்சம். 1வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்-இது செய்யா என்னும் வினையெச்சம். 2புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த என்பது இறந்தகாலம் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். 3வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர என்பது நிகழ்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். உண்பு வந்தான்--இது எதிர்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். மூன்றிடத்து ஐந்து பாலோடும் ஒட்டிக்கொள்க.

(33)

எய்தியதன் மேற் சிறப்பு விதி

225.

அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிச்4
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினையோ ரனைய என்மனார் புலவர்.

எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல்
நுதலிற்று. வழுவமைதியுமாம்.

இ - ள். மேற்சொல்லப்பட்ட மூன்று சொல்லும் சினை வினையாகித் தோன்றி, அச் சினைவினையோடு முடியாது, முதல் வினையோடு முடியினும், அச்சினைவினையான் முடிந்ததனோடு ஒக்கும், எ - று.

எ - டு. கையிற்று வீழ்ந்தது, கையிறூஉ வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தது எனற்பாலன கையிற்று வீழ்ந்தான், கையிறூஉ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் என வீழப்பட்டது கையாயினும், அதனோடு முடியாது அதன் முதல்வினையோடு முடியினும் குற்றமில என்றவாறு.

உய்த்துணர வைத்தல் என்னும் தந்திர உத்தியால் வினை யெச்சத்திற்கு முடிபாகி வரும் சினைவினை முதலொடு முடிதலேயன்றித் தனிவருஞ் சினை வினையும் முதலோடும் முடியுமென்று கொள்க. கையிற்றான், கண் கெட்டான் எனவரும்.

(34)

ஏனையெச்சங்கள் இருவகை வினையும் கொண்டு முடியும் என்பது

226.

ஏனை யெச்சம் வினைமுத லானும்
ஆன்வந் தியையும் வினைநிலை யானும்
தாமியல் மருங்கின் முடியும் என்ப.

ஏனை எச்சங்கட்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினையெச்சங்களுள் முந்துற்ற மூன்று மல்லாதன வினைமுதல் வினையானும், அவ்விடத்துப் பொருந்தும் பிறவினையானும் தாம் நடக்கும் மருங்கினான் முடியும், எ - று.


1. நாலடி-கடவுள் வாழ்த்து.

2. புறம்-33.

3. கலி-16.

4. தோன்றில்--ஏனையுரைப் பாடம்.