வினையெச்சம் அடுக்கி வருவழி வருவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வினை யெச்சச் சொற்றாம் சொற்கடோறும் முற்றுப் பெறாது பலவாற்றானும் அடுக்கிவரினும், இறுதி நின்றது முடிய ஏனையவும் பொருண்முடிவு பெற்றனவாம், எ - று. எ - டு. உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான். உண்டு பருகிக் கூத்திற் புக்கு வந்தான் என வரும். பிறவுமன்ன. (36) பெயரெச்சம் | 228. | நிலனும் பொருளும் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. |
செய்யும், செய்த என்னும் சொற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். நிலப்பெயரும், பொருட்பெயரும், காலப்பெயரும், கருவிப் பெயரும், வினைமுதற் பெயரும், வினைப் பெயருமாகிய அவ்வாறு பெயர்க்கும் ஒத்த உரிமைய: செய்யும், செய்த என்னும் சொற்கள், எ - று. இவற்றோடு முடியும் எனவே, இவை பெயரை எச்சமாக உடையவாதலாற் பெயரெச்சமெனக் குறியும் பெறும். இவையும் பால்காட்டா என்றுணர்க. இவை 1எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி என்பதின் அடங்காவோ எனின், ஆண்டு வினை முதல் தானே மூன்றிடத்து ஐந்து பாலுமாகி வரும். இவை அவ்வாறு அன்றிச் செயப்படு பொருளோடும், செயலோடும், கருவியோடும், இடத்தோடும், காலத்தோடும், வினைமுதலோடும் ஒத்த இயைபினவாகி முற்றுப்பெறுதலின் அடங்காவென்க. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (37) செய்யும் என்பதற்கு ஓர் முடிபு வேற்றுமை | 229. | அவற்றொடு வருவழிச் 2செய்யும் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே. |
எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். செய்யும் என்னும் சொல் நிலம் முதலாகிய பொருளொடு வருவழி, முற்பட வரையப்பட்ட பல்லோர் படர்க்கையும்
1. சூ. 28. 2. செய்யுமென் கிளவி-ஏனையுரைப்பாடம்.
|