[வினையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்131

131

வாம் புரவி வழுதி எனவரும். 1இது பெயரெச்சம். 2அம்பலூரு மவனொடு மொழிமே. இது முற்றுச்சொல். மெய்யொடுங் கெடும் என்ற உம்மையால் மெய்யொழியவுங் கெடும் என்று கொள்க. சாரனாட வென் றோழியுங் கலுழ்மே எனவரும். பிறவுமன்ன.

(41)

வினைச் சொற்கண் வரும் கால மரபு

233.

செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திடன் உடைத்தே வாராக் காலம்.

ஒருசார் வினையெச்சத்திற்கு வருங் கால மரபு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். செய்தென் எச்சத்துக்கண் வரும் இறந்தகாலம் எதிர்காலத்தைப் பொருந்து மிடனுடைத்து, எ - று.

என்றது, இறந்த காலத்தாற் கூறப்படும் வினையது நிகழ்ந்துழிக் கூறுதலன்றி, நிகழாத முன்னும் அவ்வாய்பாட்டான் வரப்பெறும் என்றவாறாம். நாளை உழுது வருவன்: இனித் தவம் செய்து சுவர்க்கம் புகும் என வரும்.

(42)

இதுவும் அது

234.

முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்.

இதுவும் அது

இ - ள். யாதானும் ஒருமுறைமையினையுடைய வினைச்சொல்லும் மூன்று காலமுந் தோன்றும் இயற்கைக்கண், நிகழுங் காலத்துப் பொதுநிலைப் பொதுச் சொல்லாற் கிளத்தல் வேண்டும், எ - று.

வினைச் சொல் எல்லாங் காலங் காட்டுதலின், காலங் காட்டாத பொதுப்பட்ட வினையை நிகழ்காலத்துக்கண் எல்லாப் பாற்கும் பொதுவாகி வரும் செய்யும் என்னும் சொல்லாற் சொல்லுக என்றவாறாயிற்று. ஒருவன் உண்பானாக அகம்புக்கான், அவனது வாயிற்கண் நின்றானை யாது செய்கிறான் என வினாயவழி, அவன் செய்கின்ற உண்டற் காலம் உணராமையின் உண்டான் எனவுமாகாது, உண்பான் எனவுமாகாது, ஆயிடை உண்ணும் என்க.

(43)


1. ஈங்குச் சில சொற்கள் பொருட்டொடர் பின்றிக் காணப்பட்டதாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பதிப்பிலுள்ளது.

2. குறுந்--51.