இதுவும் அது | 235. | வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு 1தோன்றல் விரைந்த பொருள என்மனார் புலவர். |
இதுவும் அது இ - ள். வருங் காலத்தும் நிகழ் காலத்தும் வரும் வினைச் சொல்லாகிய சொல், இறந்தகாலத்துக் குறிப்பொடு தோன்றல் விரைந்த பொருள் என்மனார் புலவர், எ - று. ஒருவனை உண்டாயோ, போதாயோ என்றவழி, உண்ணாதவனும் உண்டேன், போந்தேன் என்னும்; உண்கின்றானும் அவ்வாறு சொல்லும். இவ்வாறு விரைவு குறித்து நின்றவாறு கண்டு கொள்க. ஓரும், ஆங்கும் அசைகள். (44) ஒருசார் வினைச்சொற்கள் தொழிற்கும் பண்பிற்கும் பொதுவாகி வரும் எனல் | 236. | மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வது இல்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. |
ஒருசார் வினைச்சொற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மிக்கது என்பது ஒன்றி னொன்று மிக்கது என்னும் பொருண்மை. அதன் மருங்கின் வினைச்சொல் சுட்டலாவது அது பெயராகி நிற்கும் நிலைமையைச் சுட்டாது வினையாகி நிற்கும் நிலைமையைச் சுட்டி நிற்றல். அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவியாவது அப் பொருட்கண் மிகுதலாகிய தொழிலைக் குறியாது அதன் இயல்பாகிய மிகுதியைக் குறித்த பாலுணர வருஞ்சொல். செய்வதில்வழி என்பது அப்பாலுணர வருஞ் சொல்லின்கண் கருத்தாவை உணர்த்தும் ஈற்றெழுத்து இல்வழி, என்றவாறு. நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டாகும் என்பது நிகழுங் காலத்து உருபு பெறப் புலப்படும் பொருளை உடைத்து, எ - று. ஒரு பொருளின் ஒரு பொருள் மிக்கது என்னும், பொருட்கண் வரும், மிக்கது என்னும் வினைச்சொல்லைக் குறித்து மிகுந்த பண்புணர வரும் பாலுணர்த்தாத சொல் செய்யும் என்னும் சொல்லினான் வரின், அஃது
1. கிளத்தல்--ஏனை உரைப்பாடம்.
|