164தொல்காப்பியம்[உரியியல்]

164

சொற்களோடு சேர்த்தி, யாதானுமொரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்து உரைக்க: அறிவோர் என்றவாறு.

(1)

வெளிப்படையல்லா உரிச்சொற்களே இவ்வியலில்
கூறப்படும் என்றல்

294.

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.

ஈண்டு ஓதுகின்ற உரிச்சொல் இவை என்பது உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். வழக்கின்கண் எல்லாரானும் அறியப்பட்ட சொல் ஈண்டு எடுத்து ஓதவேண்டா. அறியப்படாத உரிச்சொன்மேலன: வருகின்ற சூத்திரங்கள், எ - று.

எ - டு. வெளிப்படு சொல்லாவன உண்டல் என்பதற்கு அயிறல், மிசைதல் எனவும்; உறங்குதல் என்பதற்குத் துஞ்சல் எனவும்; இணை விழைச்சு என்பதற்குப் புணர்தல், கலத்தல், கூடல் எனவும்; அச்சம் என்பதற்கு வெரூஉதல் எனவும் இவ்வாறு வருவன. இனி வெளிப்பட வழங்காதன கூறப்படுகின்றன.

(2)

உறு, தவ, நனி, என்பனவற்றின் பொருள்

295.1உறுதவ நனியென வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப

இஃது உரிச்சொற்களிற் சில சொற்பொருள் உணர்த்துமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இக்கருத்து வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும்.

இ - ள். உறு, தவ, நனி என்று சொல்லப்பட்ட மூன்று சொல்லும் மிகுதி என்னும் சொல்லான் அறியப்படும் பொருளை உணர்த்தும், எ - று.

எ - டு. ‘உறுபுனல் தந்துல கூட்டி’ (நாலடி-185): ‘ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’ (புறம் - 235); ‘வந்துநனி வருந்தினை வாழிய 2நெஞ்சே’ (அகம் - 19); இவை மிகுதி உணர்த்தியவாறு கண்டுகொள்க.

(3)

உரு என்பதன் பொருள்

296.3உருவுட் காகும்.

1. (பா - ம்.) அவைதாம் - என்ற தனிச் சொல்லுடன் ஏனையுரைகளில் இந்நூற்பா காணப்படுகிறது.

2. வாழியென்--வேறுபாடம்.

3. அடுத்த சூத்திரத்தையும் இதனோடு சேர்ந்துரைப்பர்ஏனையுரையாளர்கள்.