இ - ள். உரு என்னும் சொல் உட்கு என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘உருகெழு கடவுள்’ 1உட்குமிக்க கடவுள் என்றவாறு. (4) புரை என்பதன் பொருள் இ - ள். புரை என்பது உயர்வு என்னும் பொருள்படும். எ - று. எ - டு. ‘புரைய மன்ற புரையோர் கேண்மை.’ (நற்-க,) (5) குரு, கெழு என்பனவற்றின் பொருள் | 298. | குருவும் கெழுவும் நிறனா கும்மே. |
இ - ள். குரு என்பதூஉம், கெழு என்பதூஉம் நிறம் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘குருமணித் தாலி,’ ‘செங்கேழ் மென்கொடி,’ (அகம்-80.) கெழு என்பது கேழ் எனவும் வரும். (6) செல்லல், இன்னல் என்பனவற்றின் பொருள் | 299. | செல்லல் இன்னல் இன்னா மையே. |
இ - ள். செல்லல் என்னும் சொல்லும், இன்னல் என்னும் சொல்லும் இன்னாமைப் பொருளில் வரும், எ - று. எ - டு. 2’மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’, ‘வெயில் புறந் தரூஉம் இன்ன லியக்கத்து’ (மலைபடு-374.) (7) மல்லல் என்பதன் பொருள் இ - ள். மல்லல் என்னும் சொல் வளப்பம் என்னும் பொருள் தரும், எ - று. எ - டு. ‘மல்லல் மால்வரை’. (அகம்-52) (8) ஏ என்பதன் பொருள்
1. பதிற்-21 2. அகம்-22. 3. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒன்றாகக் கொள்வர் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும்.
|