166தொல்காப்பியம்[உரியியல்]

166

இ - ள். ஏ என்னும் சொல் பெற்றுதல் என்னும் பொருள்படும், எ - று.

எ - டு. ‘ஏக லடுக்கம்’. (நற்றிணை-116.) பெற்றுதல் என்பது இக்காலம் பற்றுதல் எனவரும்.

(9)

உகப்பு என்பதன் பொருள்

302.1உகப்பே உயர்தல

இ - ள். உகப்பு என்னும் சொல் உயர்தல் என்னும் பொருள்படும், எ - று.

எ - டு. ‘விசும்புகந் தாடாது’.

(10)

உவப்பு என்பதன் பொருள்

303.உவப்பே உவகை.

இ - ள். உவப்பு என்னும் சொல் உவகை என்னும் பொருள்படும். எ - று.

எ - டு. ‘உவந்துவந் தார்வ நெஞ்சமொடு’. (அகம்-35)

(11)

பயப்பு என்பதன் பொருள்

304.பயப்பே பயனாம்.

இ - ள். பயப்பு என்னும் சொல் பயன் என்னும் பொருள்படும், எ - று.

எ - டு. ‘பயவாக், களரனையர் கல்லா தவர்’. (குறள்-406.)

(12)

பசப்பு என்பதன் பொருள்

305.பசப்பு நிறனாகும்.

இ - ள். பசப்பு என்னும் சொல் நிறத்தை உணர்த்தும், எ - று.

எ - டு. ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’. (கலி-7)

(13)

இயைபு என்பதன் பொருள்

306.இயைபே புணர்ச்சி.

இ - ள். இயைபு என்னும் சொல் புணர்தல் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘இயைந் தொழுகும்’.

(14)


1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒன்றாகக் கொள்வர் ஏனையுரையாளர்கள்.