எ - டு. ‘வார்ந்திலங்கு வையெயிற்று’ (குறுந்-14); ‘போகு கொடி மருங்குல்’ இவை நேர்மை. ‘வார்கயிற்றொழுகை’ (அகம்-173);1‘வெள்வேல்விடத்தேரொடு காருடைபோகி,’ ‘மால்வரை யொழுகிய வாழை’ (சிறுபாண்-21). இவை நெடுமை. (23) தீர்தல், தீர்த்தல் என்பவற்றின் பொருள் | 316. | தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். |
இ - ள். தீர்தல் என்னும் சொல்லும், தீர்த்தல் என்னும் சொல்லும் விடுதல் என்னும் பொருள் படும், எ - று. எ - டு. ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற்றிணை: 108); இது தன்வினை. நோய் தீர்த்தான் என்பது பிறவினை-விடுத்தான் எனப்படும். இவ்வேறுபாட்டான் இரண்டாக ஓதினார். (24) கெடவரல், பண்ணை என்பவற்றின் பொருள் | 317. | கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. |
இ - ள். கெடவரல் என்னும் சொல்லும், பண்ணை என்னும் சொல்லும் விளையாட்டு என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘கெடவர லாயம்’. ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (மெய்ப்பாட்டியல்-1). (25) தட, கய, நளி என்பவற்றின் பொருள் | 318. | தடவும் கயவும் நளியும் பெருமை. |
இ - ள். தட என்னும் சொல்லும், கய என்னும் சொல்லும், நளி என்னும் சொல்லும் பெருமை என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘தடக்கை’ (புறம்-394). ‘கயவாய்.’ (அகம்-118) ‘நளிமலை’ (புறம்-150). (26) | 319. | 2அவற்றுள், தடவென் கிளவி கோட்டமும் செய்யும் கயவென் கிளவி மென்மையும் செய்யும் நளியென் கிளவி செறிவும் ஆகும். |
இ - ள். மேற் சொன்னவற்றுள், தட என்னும் சொல் கோடுதல் என்பதன் பொருண்மையும், கய என்னுஞ் சொல் மென்மை என்பதன் பொருண்மையும், நளிதல் என்பது செறிதல் என்பதன் பொருண்மையும் படும், எ - று.
1. பதிற்-13. 2. இதனை மூன்று சூத்திரங்களாகக் கொள்வர் ஏனையுரையாளர்கள்.
|