எ - டு. ‘தடமருப்பெருமை’ (நற்-120); ‘கயந்தலைக்குழவி’; ‘நளியிருள்’. (27) பழுது என்பதன் பொருள் இ - ள். பழுது என்னும் சொல் பயனின்மை உணர்த்தும், எ - று. எ - டு. “பழுது கழிவாழ் நாள்”. (28) சாயல் என்பதன் பொருள் இ - ள். சாயல் என்னும் சொல் மென்மை என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘சாயன் மார்பு’. (29) முழுது என்பதன் பொருள் | 322. | முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே. |
இ - ள். முழுது என்னும் சொல் ஒழியாமையை உணர்த்தும், எ - று. எ - டு. ‘உலகமுழு தாண்ட’. (சிலப்-அந்தி-1.) (30) வம்பு என்பதன் பொருள் இ - ள். வம்பு என்னும் சொல் நிலையின்மையை உணர்த்தும், எ - று. எ - டு. ‘வம்ப மாரி’ (குறுந்-66). (31) மாதர் என்பதன் பொருள் இ - ள். மாதர் என்னும் சொல் காதல் என்னும் பொருள் படும், எ - று. எ - டு. ‘மாதர் நோக்கு’. (32) நம்பு, மேவு என்பவற்றின் பொருள் | 325. | நம்பும் மேவும் நசையா கும்மே. |
இ - ள். நம்பு என்னும் சொல்லும், மேவு என்னும் சொல்லும் நசை என்பதன் பொருள்படும், எ - று.
|