[உரியியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்171

171

எ - டு. ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம்-198) ‘பேரிசை நவிர மேஎ யுறையும்.’ (மலைபடு-82)

(33)

ஓய்தல் ஆய்தல், நிழத்தல், சாஅய் என்பவற்றின் பொருள்

326.

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.

இ - ள். ஓய்தல் என்னும் சொல்லும், ஆய்தல் என்னும் சொல்லும், நிழத்தல் என்னும் சொல்லும், சாஅய் என்னும் சொல்லும் ஆகிய அந்நான்கு சொல்லும் ஒரு பொருட்குள்ள அளவின் நுணுக்கத்தைக் காட்டும், எ - று.

எ - டு. ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி.7); ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி-96); ‘நிழத்த யானை மேய் புலம்படர’ (மது-303); ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல்-18).

(34)

புலம்பு என்பதன் பொருள்

327.புலம்பே தனிமை.

இ - ள். புலம்பு என்னும் சொல் தனிமை என்னும் பொருள்படும், எ - று.

எ - டு.‘புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி’. (அகம்-7)

(35)

துவன்று என்பதன் பொருள்

328.துவன்று நிறைவாகும்.

இ - ள். துவன்று என்பது நிறைவு என்பதன் பொருள்படும். எ - று.

எ - டு. “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்” (நற்-170.)

(36)

முரஞ்சல் என்பதன் பொருள்

329.முரஞ்சல் முதிர்வே.

இ - ள். முரஞ்சல் என்னுஞ் சொல் முதிர்வு என்னும் பொருள்படும், எ - று.

எ - டு. “கோடுபல முரஞ்சிய கோளி யாலம்”. (மலைபடு-268)

(37)

வெம்மை என்பதன் பொருள்

330.வெம்மை வேண்டல்.

இ - ள். வெம்மை என்னும் சொல் வேண்டல் என்பதன் பொருள்படும், எ - று.