172தொல்காப்பியம்[உரியியல்]

172

எ - டு. “நீ வெய்யோளோடு.” (அகம்-6.)

(38)

பொற்பு என்பதன் பொருள்

331.பொற்பே பொலிவு.

இ - ள். பொற்பு என்னும் சொல் பொலிவு என்பதன் பொருள்படும். எ - று.

எ - டு. ‘பெருவரை யடுக்கம் பொற்ப’ (நற்-34.)

(39)

வறிது என்பதன் பொருள்

332.வறிது சிறிதாகும்.

இ - ள். வறிது என்னும் சொல் சிறிது என்பதன் பொருளாகும், எ - று.

எ - டு. ‘வறிதுநெறி யொரீஇ.’

(40)

ஏற்றம் என்பதன் பொருள்

333.1ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்.

இ - ள். ஏற்றமென்னும் சொல் நினைவு, துணிவு என்பவற்றின் பொருள்படும். எ - று.

எ - டு. ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந்-145) இது நினைவு. 2’ஏற்றென் றிரங்குவ செய்யற்க.’ இது துணிவு.

(41)

பிணை, பேண் என்பவற்றின் பொருள்

334.பிணையும் பேணும் பெட்பின் பொருள.

இ - ள். பிணை என்னுஞ் சொல்லும், பேண் என்னும் சொல்லும் பெட்பு என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’; ‘அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்’; (புறம்-99.)

(42)

பணை என்பதன் பொருள்

335.பணையே பிழைத்தல் பெருப்பு மாகும்.

இ - ள். பணை என்னும் சொல் பிழைத்தல் என்பதன் பொருளும், பெருமை என்பதன் பொருளும் படும். எ - று.

எ - டு. ‘பணைத்துவீழ் பகழி.’ இது பிழைப்பு. ‘பணைத்தோள்’ (அகம்-1) இது பெருமை.

(43)


1. எற்றம் என்பது நச்சினார்க்கினியர் பாடம்.

2. குறள்-665.