படர் என்பதன் பொருள் | 336. | படரே உள்ளல் செலவும் ஆகும். |
இ - ள். படர் என்பது நினைத்தல் என்பதன் பொருளும், செலவு என்பதன் பொருளும் படும், எ - று. எ - டு. ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி.’ (புறம்.47) இது நினைவு. ‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந்-108) இது செலவு. (44) பையுள், சிறுமை என்பவற்றின் பொருள் | 337. | பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள். |
இ - ள். பையுள் என்னும் சொல்லும், சிறுமை என்னும் சொல்லும் நோய் என்பதன் பொருள்படும். எ - று. எ - டு. ‘பையுண் மாலை.’ (குறுந்-195.); ‘சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.’ (நற்-1) (45) எய்யாமை என்பதன் பொருள் | 338. | எய்யா மையே யறியா மையே. |
இ - ள். எய்யாமை என்னும் சொல் அறியாமை என்னும் பொருள் படும், எ - று. எ - டு. ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’. (குறிஞ்சிப்-8.) (46) நன்று என்பதன் பொருள் இ - ள். நன்று என்பது பெரிது என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘நன்று மரிதுற் றனையாற் பெரும.’ (அகம்-10.) (47) தாவு என்பதன் பொருள் | 340. | தாவே வலியும் வருத்தமு மாகும். |
இ - ள். தாவு என்னும் சொல் வலி என்பதன் பொருண்மையும், வருத்தம் என்பதன் பொருண்மையும் படும், எ - று. எ - டு.‘தாவி னன்பொன் றைஇய பாவை.’ (அகம்-212..) இது வலி. ‘கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென’, (குறுந்-69.) இது வருத்தம். (48) தெவு என்பதன் பொருள் | 341. | தெவுக்கொளற் பொருட்டே. |
|