இ - ள். தெவு என்னும் சொல் கொள்ளுதல் என்பதன் பொருள் படும், எ - று. எ - டு. ‘நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்.’ (மதுரைக்-89.) (49) தெவ்வு என்பதன் பொருள் இ - ள். தெவ்வு என்னும் சொல் பகை என்னும் பொருள்படும், எ - று. எ - டு. “தெவ்வுப் புலம்.” (50) விறப்பு, உறப்பு, வெறுப்பு என்பவற்றின் பொருள் | 343. | விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே. |
இ - ள். விறப்பு என்னும் சொல்லும், உறப்பு என்னும் சொல்லும், வெறுப்பு என்னும் சொல்லும் செறிவு என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்’. ‘உறந்த விஞ்சி.’ ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’. (புறம்-53.) (51) விறப்பு என்பதற்கு மேலும் ஒரு பொருள் | 344. | அவற்றுள், விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். |
இ - ள். அவற்றுள் விறப்பு என்னும் சொல் வெரூஉதல் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல’ (பெரும்பாண்-226.) (52) கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்பவற்றின் பொருள் | 345. | கம்பலை சும்மை கலியே யழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள. |
இ - ள். கம்பலை என்னும் சொல்லும், சும்மை என்னும் சொல்லும், கலி என்னும் சொல்லும், அழுங்கல் என்னும் சொல்லும் இவை நான்கு சொல்லும் அரவம் என்னும் பொருளையுடைய, எ - று. எ - டு. ‘கம்பலை மூதூர்’ (புறம்-54); ‘ஒலிபெருஞ் சும்மையொடு’; ‘கலிகொளாயம் (அகம்-11); ‘உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கலூரே’(நற்-203) (53)
|