திக்கும் அடையாகி மாதவி என்னும் ஒரு பெண்பாற்கும் அடையாகிப் பொருள் வேறுபடுதலின், இசை யெச்சமாயிற்று. இது தனிமொழியாகிய பெயர்நிலைக் கிளவியின் அடங்காமையின், தொடர்மொழி யென்று வேறோதினார். மெய்ந்நிலை மயக்கமாவது பொருணிலைமை மயக்கங் கூறுதல். 1“குருகுகரு வுயிர்ப்ப, ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி” என்றவழிக், குருகு என்பது மாதவியென்னுங் கொடிக்கும் பெயராதலின், அப்பெயருடையதனைக் குருகு என்றார். காஞ்சி என்பது மேகலைக்குப் பெயராதலின், அது மணிக்காஞ்சி என்றொட்டி மணிமேகலை யென்பாள்மேல் வந்தது. இவ்வாறு பொருணிலை மயங்க வருவனவும் இசையெச்சமாம் என்றவாறு. மந்திரம் என்பது பிறரறியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக்கூறுஞ் சொல். அதன்கண் ஆகுவன, உலகினுள் வழங்குகின்ற பொருட்குத் தாம் அறிகுறியிட்டு ஆண்டுவருங் குழுவின்வந்த குறிநிலை வழக்கு. அது வெளிப்பட்ட சொல்லால் உணரும் பொருட்கு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிறபெயரிட்டு வழங்குதலும் என இருவகைப்படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின் இசை யெச்சமாயின. அவற்றுள், பொருட்கு வேறு பெயரிட்டன:--2வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் முதலாயின. எழுத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு:--“மண்ணைச் சுமந்தவன்றானும் வரதராசன் மகன்றானும், எண்ணிய வரகாலிமூன்று மிரண்டு மரமும் ஓர்யாறும், திண்ண மறிய வல்லார்க்குச் 3சிவகதியைப் பெறலாமே.” இதனுள் மண்ணைச் சுமந்தவன்-ந, வரதராசன் மகன்-ம, வரகாலி மூன்று-சி, இரண்டுமரம்-வா, ஓர்யாறு-ய எனக்கூற, நமச்சிவாய எனப் பொருளாயிற்று. பிறவும் அன்ன. இதுவும் அது | 440. | செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே. |
இது வினைச்சொற்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். செய்யாய் என்னும் ஆய் ஈற்று முன்னிலை வினைச் சொல், செய் என்னும் ஏவல் குறித்த வினைச்சொல்லுமாகி வரும், எ - று. எ - டு. நீ எம் இல்லத்து உண்ணாய் என்றவழி, உண்ணாமையைக் குறித்தலே யன்றி உண்க என்பதும் குறித்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு வருவதும் இசையெச்சம். இன்னும் இச்சூத்திரத்திற்குப் பொருள் செய்யாய் என்னும் வினைச் சொல் செய் எனக் குறைந்து நிற்கவும் பெறும் என்றவாறு. உண்ணாய் என்பது உண் எனவரும். (48)
1. மணி-காதை-18. வரி-55, 56. 2. மயிலை-150ஆம் பக்கம் பார்க்க. 3. சிவகதியும் பெறலாமே என்பதும் பாடம்.
|