220தொல்காப்பியம்[எச்சவியல்]

220

1“பகலே பலருங் காண நாண்விட், டகல்வயற் படப்பை யவரூர் வினவிச், சென்மோ வாழி தோழி பன்னாட், கருவிவானம் பெய்யாதாயினும், அருவி யார்க்கும் கழைபயி னனந்தலை, வான்றோய் மாமலைக் கிழவனைச், சான்றோ யல்லை யென்றனம் வரற்கே” என்றவழிச் செல்வேமோ எனற்பாலது சென்மோ என வந்தது. பிறவுமன்ன.

இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றாற் பொருளுரைப்பவாலெனின், வினைச் சொற்றிரிபு அதிகாரப்பட்டு வருதலானும், காலத்துப்படினே என்றமை யானும் பிறவாற்றானுரைப்பது பொருளன்றென்க.

(50)

குறைச்சொல்

443. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்.

குறைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். யாதானுமொரு சொல்லைக் குறைக்க வேண்டுவழிக்’ குறைக்க வேண்டுமிடமறிந்து குறைக்க, எ - று.

அது தலைக்குறைத்தலும், இடைக்குறைத்தலும் கடைக்குறைத்தலும் என மூவகைப்படும்.

எ - டு. ‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ என்றவழித், தாமரை யென்பது தலைக்குறைந்து நின்றது. 2‘அகலிரு விசும்பினாஅல்’ என்றவழி ஆரல் என்பது இடைக் குறைந்து நின்றது. ‘நீலுண்டுகிலிகை என்றவழி) நீலம் என்பது கடைக் குறைந்து நின்றது.

தொகுக்குவழித் தொகுத்தல் என்பதனோடு இதனிடை வேறுபாடென்னை யெனின், ஆண்டுவிரிந்து நின்ற சொற்றொகுக்க வேண்டுவழித் தொகுமாறு கூறினார். ஈண்டு, இயற்கையிற் குறைதலிற் குறைச்சொல் லென்றார்.

(51)

மேலதற் கோர் புறனடை

444.குறைந்தன வாயினும் நிறைப்பெய ரியல.

மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். குறைச்சொற்கிளவி குறைந்து நின்றனவாயினும், பொருள் வேறுபடா நிறைந்த பெயரியல, எ - று.

உதாரணம் மேற்காட்டப்பட்டன.

இவ்விதி மேல் விகாரப்பட்ட சொற்கும் ஒக்கும் என்று கொள்க.

(52)

445. இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே

இடைச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருள் நிகழ்ச்சி
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இடைச் சொற்கள் எல்லாம் வேற்றுமைச் சொல்லாம், எ - று.


1. நற்-365-காண்க.

2. மலைபடு-100.