[எச்சவியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்223

223

குக் கருதினாளென இப்பொருளெல்லாம் அவள் குறிப்பினானுணர நின்றவாறு கண்டுகொள்க.

இது சொல்லினானுணராமையான் எடுத்தோதல் வேண்டிற்று, பிறவும் இந்நிகரன அறிந்துகொள்க.

(57)

ஒருபொருள் இருசொல் வழுவல

450.ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்

செப்புவழு வமைத்தலை நுதலிற்று.

இ - ள். ஒருபொருள்மேல் இரண்டுசொற் பிரிவின்றிவரின் நீக்கப்படா, எ - று.

1“உயர்ந்தோங்கு பெருமலை”, “உச்சி மீமிசை”, 2“நிலத்து வழி மருங்கிற் றோன்றலான” என்பன “பிரிவில” என்றதனான் ஒட்டிநிற்றல் வேண்டும்.

(58)

ஒருமைசுட்டிய பெயர் பன்மைப் பொருள்படல்

451.ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனு மாருண்டே.

ஒருமைப்பெயர் பன்மைப்பொருளுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒருமைகுறித்த பெயர்ச்சொல் பன்மைக்காகும் இடனுமுண்டு, எ - று.

“புலைய னெறிந்த பூசற் றண்ணுமை-ஏவ லிளையர் தாய் வயிறு கரிப்ப” (அகம். 96) என்றவழித் தாயரெனல் வேண்டுமாயினும், தாய் என்பது பன்மை குறித்து நின்றது.

(59)

முன்னிலைக்கண் வரும் ஒருமை பன்மைப்பொருள்படல்

452.முன்னிலைச் சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரை நிலை யின்றே
ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்.

இஃது ஒருமை பன்மை மயக்க முணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். முன்னிலையைக் குறித்த ஒருமைச்சொல் பன்மையொடு முடியினும் நீக்கப்படாது அதனை ஆற்றுப்படுக்கும்வழி பாதுகாத்துக் கூறுக, எ - று.

ஆற்றுப்படைமருங்கிற் போற்றல்வேண்டும் எனவே, அஃதல்லாத வழிப் போற்றாமையுங் கூறப்படுமாயிற்று. ஆற்றுப்படை மருங்கிற்


1. மணி. 22, 11.

2. பெய. 40.