இதுவுமது | 22. | ஆக்கக் கிளவி காரணம் இன்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. |
மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆக்கச் சொல் காரணமின்றியும் வரும் வழக்கினுள், எ-று. எனவே, செய்யுளகத்து வரப்பெறா என்றவாறாம். போக்கின்றென்பது போகுதலின்று என்றவாறு. எனவே வரும் என்று பொருளாயிற்று. உம்மை இறந்தது தழீஇயிற்று. ஆடை நன்றாயிருந்தது, மணி நன்றாயிருந்தது என நன்றாதற்குக் காரணங் குறியாது வந்தன. பைங்கூழ் நல்லவாயினவென இடமுங்காலமும் இனமுஞ் சுட்டாது கண்டகாலத் தியற்கைபற்றி வரும் வழக்குக் கொள்க. (22) பால் ஐயம் | 23. | பான்மயக் குற்ற ஐயக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். |
மேற் சொல்லப்பட்ட இருவகைப் பொருட்கண்ணும் ஐயக்கிளவி யுணர்த்துகின்றாராகலின், இச்சூத்திரம் அதன்பகுதியாகிய பால் ஐயம், திணையையம் என்னும் இரண்டனுள்ளும் பால் ஐயம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தானறிந்த பொருட்கட் பான்மயக்குற்ற ஐயப் பொருண்மையைப் பன்மையாற் கூறுக, எ - று. தானறிபொருள் என்றமையால் திணையறிந்து பால் அறியாதவழி என்பது பெறப்பட்டது. பால் ஐயம் பெருவழக்கிற்று ஆதலின் முற்கூறப்பட்டது. சேய்மைக்கட் டோன்றுவதோர் மக்கட்பிழம்பு கண்டு, ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ என ஐயுற்றான் அதனைத் தோன்றுவான் எனவும் ஆகாது, தோன்றுவாள் எனவும் ஆகாது, ஆயிடைத் தோன்றுவார் என்க. பைங்கூழ் அழிவு கண்டான் ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய்புக்கன என்க. (23) திணை ஐயம் | 24. | 1உருபென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்றும் உரித்தே சுட்டுங் காலை. |
திணை ஐயத்தின்கண் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள்.உயர்திணை அஃறிணை யென்னும் இரண்டு வேறு பாட்டினையுஞ் சுட்டி ஐயப்படுங் காலத்து, உருபெனச் சொல்லினு
1. ‘உருவென’ என்பது சேனாவரையர், கல்லாடனார் ஆகியோரது பாடம்.
|