[கிளவியாக்கம்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்17

17

ஒருசார் மரபு வழுக்காத்தலை நுதலிற்று.

இ - ள். வண்ணம் பெற்ற சினையையுடைய பெயர்ச்சொல் முற்பட அடையும், அதன்பின் சினையும் அதன்பின் முதலுமாகி அம்முறை மயங்காமை வழக்குப்பெற்றியலும், எ - று.

வண்ணச் சினைச் சொல் மயங்காமை நடைபெற்றியலும் எனவே, வண்ண முதற்சொல் மயங்கியல்லது நடவாதென்ற வாறாம்.

இதனாற் பெற்ற பொருள் என்னையெனின், பொருட்கு உளதாகிய பண்பும், சினையும், பொருளோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், பொருண்மேற் செல்லாது சினைமேற் செல்லும் என்பது அறிவித்தற் கென்க.

எ - டு. செங்கால்நாரை : வண்ணம் சினைமேலேறி முதலொடு முடிந்தது. கருங்கோட்டியானை எனப் பண்பினை முதலோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், கருமை யானையின் மேற்செல்லாது கோட்டின் மேற் செல்லுதலின் இம்முறை நடைபெறாததாயிற்று.

வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், வடிவு முதலாய பண்புங் கொள்ளப்படும்.

எ - டு.சிறுகண்யானை. பிறவும் அன்ன.

அடையென்று பொதுப்படக் கூறியவதனால் ஒரு பொருண்மே லடை யிரண்டு வருதலுங் கொள்க. கருநெடுங்கூந்தற் காரிகை எனவரும்.

முறை மயங்காமை என்றதனால், மயங்குமாயின், குறித்த பொருண் மேற் செல்லா தென்க.

எ - டு. பெருந்தலைப் புல்லார் நல்லா(ர்) என்றவழி, பெருந்தலை யென்பது புல்லோடு சார்ந்து வருதலிற் சொல்லுவான் குறிப்பு வேறாயினும் 1அதன்மேற் செல்லாதாயிற்று.

கவிசெந் தாழிக் குவிபுறத்திருந்த-செவிசெஞ் சேவலும்’ (புறம். 238) என முறை மயங்கி வந்ததால் எனின், ஆண்டுச் செஞ்செவி என்பது மொழிமாறி நின்ற தென்க.

(26)

பால் வழுவமைதி

27.

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.

ஒருசார் பால்வழுவும் திணைவழுவும் அமைத்தலை நுதலிற்று.

இ - ள். ஒருவரைச் சொல்லும் பன்மைச் சொல்லும் ஒன்றனைச் சொல்லும் பன்மைச் சொல்லும் இலக்கண மருங்கிற் சொல் நெறியல்ல, வழக்கின் ஆகிய உயர்சொற்கிளவி, எ - று.


1. குறிப்புள் ஒன்றாயினும்.