[கிளவியாக்கம்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்19

19

இவற்றுள் கொடுவென்பதனை ‘கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் - தன்னைப் பிறன்போற்கூறுங்குறிப்பில் - தன்னிடத் தியலும் என்மனார் புலவர்’ (எச்-49) என எடுத்து வழுவமைக்கின்றார் ஆகலானும், பிறவும் இத்துணைச் சிறப்பில வாதலானும் இலக்கண வழக்கு மேற்காட்டப்பட்ட ஆறுதாரணமுமே. ஏனைய ஆறும் ஒருமுகத்தான் வழுவமைத்தவாறாகக் கொள்க.

(28)

யாது, எவன் என்னும் சொற்கள்

26.யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.

 வினா வழுக் காத்தலை நுதலிற்று

இ - ள். யாது எவன் என்று சொல்லப்பட்ட இரண்டு சொல்லும் அறியாத பொருட்கட் பொருந்தத் தோன்றும், எ - று.

நின்னாடு யாது? இப்பண்புள்ளது எவன்? என வரும்.

ஏனைப்பால் உணர்த்தும் வினாச்சொற்களெல்லாம் கூறாது இவ்விரண்டினையும் வகுத்துக் கூறியது என்னை யெனின், ஆண்டு உளதோர் வழுவமைத்தற்பொருட் டென்க.

(29)

எய்தியதன்மேற் சிறப்பு விதி

30.அவற்றுள்,
யாதென வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
தெரிந்த கிளவி யாகலும் உரித்தே.

வினாவழு அமைத்தலை நுதலிற்று

இ - ள்.மேற் சொல்லப்பட்டவற்றுள் யாது என்று சொல்லப்பட்ட அறியாத பொருண்மைக்கண் நிகழும் சொல், அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற் பொருட்டு ஆராய்ந்த சொல்லாகலும் உரித்து, எ - று.

உம்மை எச்சவும்மை ஆகலான், ஐயம் அறுத்தலே யன்றி அறிவொப்புக் காண்டற் பொருட்டும் வினாவப்படும் என்றுங் கொள்க.

ஐயம் அறுத்தலாவது, இச்சொற்குப் பொருள் இது என உணர்ந்தான் ஒருதலையாகத் துணிதலாற்றாது, அஃதறிவான் ஒருவனை வினாதல்.

அறிவு ஒப்புக்காண்டலாவது, சொல் இலக்கணம் அறிவான் ஒருவன் அஃது அறிவான் ஒருவனை இதற்குப் பொருள் யாது என வினாதல், பிறவும் அன்ன.

இவ்வாறு அறிந்த பொருளை வினாதல் வழுவாயினும் அமைக என்றவாறு.

(30)