72கிளவியாக்கம்

உரை:இரட்டையாகத் தோன்றிப்  பொருளுணர்த்துஞ்  சொற்கள் தாம்
இரட்டுதலின்று பிரிந்திசைக்கமாட்டா.
 

எ-டு: கருகருத்தது, மொடுமொடுத்தது,  கலகலத்தது, கொறுகொறுத்தார,்
முணுமுணுத்தார் எனவரும்.
 

ஒரு    காம்பின்கண்    பிளவுபட்டுக்    கிளைத்த   இலையிரட்டைப்
பூவிரட்டைகளைப் போலச்  சொல்லால்   இரட்டையாயினும்   பொருளால்
ஒன்றே என்பது தோன்ற இரட்டைக்கிளவி என்றார்.
 

இவை பெரும்பான்மையும் இசை, குறிப்பு,  பண்பு   ஆகிய   குறிப்புப்
பொருள் பற்றி வருதலின்  உரிச்சொல்   பற்றிய   மரபு   வழுக்காத்ததாக
நச்சினார்க்கினியர் கூறுவர்.
 

வரிவரியாக எழுதினாள். படிப்படியாக முன்னேறினான்  என்றாற்போலப்
வினையடிகளும் வழங்கப்படுதலின் வரையறுத்தல் ஒவ்வாதென்க.
 

சூ. 49:

ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொரு ளொழியத் 

தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் 

உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்  

(49)
 

க-து:

பலபொருட்குப் பொதுவாகிய ஒன்றனை  ஒருபெயரிட்டு  வழங்கும்
முறைமை கூறுகின்றது.
 

உரை: உயர்திணையிடத்தும் அஃறிணையிடத்தும் ஒரு பெயர்  படுத்துச்
சொல்லும் பல்பொருட்குப் பொதுவாகிய சொல்லை அவற்றுள்  தலைமையும்
பன்மையும் தெரிந்து பிற உள்பொருள் நீங்க ஒரு  பெயரான் வேறுபடுத்துக்
கூறுக. பொதுச் சொல்லாவன. நாடு, சேரி, தோட்டம், காடு முதலியன.
 

எ-டு:பிறரும் வாழ்வாரேனும் பார்ப்பனச்  சேரி   என்பது   தலைமை
பற்றி ஒரு பெயர் கொண்டது. எயினர் நாடு என்பது பன்மை  பற்றி   ஒரு
பெயர் கொண்டது. இவை உயர்திணைப்   பொருள்.  பிற புல்லும்  மரனும்
இருப்பினும் கமுகத்தோட்டம் என்பது   தலைமை   பற்றி   ஒரு   பெயர்
கொண்டது. வாழைத்தோட்டம் என்பது   பன்மை   பற்றி   ஒரு   பெயர்
கொண்டது. இவை அஃறிணைப் பொருள். தலைமை  பற்றிக்   கூறப்பெற்ற
பொருளே பலவாக இருப்பின் அதுபன்மை பற்றியதாகும். பிறவும் அவ்