வாறே. இனி ஒன்றென முடித்தல் என்னும் உத்திவகையான் பல்பொருட்டொகுதியன்றிப் பல்பொருட்கு உரியவாய் வரும் பொதுச்சொற்கும் இம்மரபு கொள்க. |
எ-டு:பிறரும் செல்வாரேனும் அரசர் பெருந்தெரு, புலவோர் அவை என வருவன தலைமை பற்றியும் பன்மை பற்றியும் உயர்திணைக்கண் வருவனவாம். ஆனதர், ஆதீண்டுகுற்றி, எருத்தில் என்பன தலைமையும் பன்மையும் பற்றி அஃறிணைக்கண் வருவனவாம். யாதானும் ஒரு பொருளான் பெயர்சுட்டவேண்டுதலின் இது தம்மரபினவாய் வந்த வழாநிலையாம் என்க. |
| சூ. 50: | பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் |
| மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன |
(50) |
க-து: | பாலறி கிளவியாகாமல் ஒருபாற்குரியவாய் மரபுபற்றி வரும் ஒருசார் பெயர்ச் சொல்லும் தொழிற்சொல்லும் தொடர் மொழியாக்கத்தின்கண் மயங்கல்கூடா என்கின்றது. |
| |
உரை: பெயரின் கண்ணும் தொழிலின் கண்ணும் ஒன்றற்குரியவாய்ப் பிரிந்துவரும் ஒருசார் சொற்கள்எல்லாம் வழக்குவழிப் பட்டனவாகலின் அவை மயங்கல்கூடா. |
அஃதாவது வினையிற்றோன்றும் பாலறிகிளவியும் பெயரிற்றோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடாமை போலப் பாலறிவிக்கும் ஈற்று இடைச்சொல் பெறாமல் செஞ்சொல்லாய், இவை ஆடூஉவிற்குரியன, இவை மகடூஉவிற்குரியன என வழக்குப் பற்றி வரும் சொற்கள் தொடர் மொழியாக்கத்தின்கண் மயங்கல் கூடா என்றவாறாம். |
'அணி' என்பது இருபாற்கும் பொதுவாயினும் தொடி, மேகலை, சிலம்பு முதலாயவை மகளிர்க்கே உரியவாயும் கழல், முடி, தோள், வளை (வாகை வளையம்) முதலியவை ஆடவர்க்கே உரியவாயும் வருதல் வழக்கு வழிப்பட்டவையாம். |
அங்ஙனமே தொழிலின்கண்ணும் வருமாறு:- மணந்து கோடல்வினை இருபாற்கும் பொதுவாயினும், வரைதல் ஆடவர்க்குரிய செயலாகவும் வாழ்க்கைப்படுதல் என்பது மகளிர்க்குரிய செயலாகவும் கூறுதல் வழக்கு வழிப்பட்டவையாம். எனவே, இம்மகளிர் தொடி செறித்தனர் எனவும் இவ்வீரர் கழல்யாத்தனர் எனவும் வருதல் வேண்டும். அன்றி |
இவ்வீரர் தொடி செறித்தனர், இம்மகளிர் கழல்யாத்தனர் என வருதல் மரபு மயக்கமாம். |