உரை:எண்ணுதற்கண் திணை விரவிவரும் பெயர்கள் பல இடத்தினும் செய்யுட்கண் அஃறிணை முடிபினவாம். |
எ-டு:வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய் எருமை என்றிவை ஆறும் குறுகார் அறிவுடையார் எனவரும். |
'பலவயினானும் அஃறிணை முடிபின' என்றதனான் சிலவயினான் உயர்திணை முடிபின என்றவாறாம். |
'பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு ஆற்ற வழிவிலங்கினாரே பிறப்பிடைப் போற்றி எனப்படுவார்' எனவும் பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு எனவும் வரும். செய்யுளுள் அஃறிணை முடிபின எனவே வழக்கினுள் இருமுடிபும் கொள்ளப்படும். |
எ-டு:அரசனும் யானையும் வீரரும் களம்புக்கனர் எனவும் இவ்வூர் மக்களும் சோலையும் நீரும் யாவும் இனிய எனவும் வரும். |
எண்ணப்படுதற்கண் யாவும் பொருட்பகுதியாய் அடங்கலின் அஃறிணை முடிபின எனக் கொண்ட தொல்லோர் மரபினை ஆசிரியர் செய்யுள்முடிபாகக் கூறினார் என்க. |
| சூ. 52: | வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் |
| வினைவேறு படாப்பல பொருளொரு சொல்என்று |
| ஆயிரு வகைய பலபொரு ளொருசொல். |
[52] |
க-து: | பலபொருளொருசொல்லின் தன்மையும் அதனான் அஃது எய்தும் வகையும் கூறுகின்றது. |
| |
உரை: (சிறப்பு) வினையான் வேறுபடும் பலபொருளொரு சொற்கள் (பொது) வினையான் வேறுபடாத பலபொருளொரு சொற்கள் என அவ் இருவகையவாம் பலபொருளொரு சொற்கள். |
வேறுபடுவினை என்றது வேறுபடுத்துவதற்குரிய சிறப்புவினைகளை. வேறுபடாவினை என்றது வேறுபடுத்துவதற்கியலாத பொது வினைகளை. இவ்விருவகைவினைகளான் எய்தும் நிலைமையைப் பலபொருளொரு சொற்களின் மேல் ஏற்றி இருவகை என்றார். பின்னர் இலக்கணங்கூறுதற்கு அவற்றைக்குறியீடுசெய்து கொண்டார் என்க. |
அஃதாவது 'கொடி' என்பது நிலத்து முளைத்துவரும் பொருளுக்கும், அடையாளமிட்டு எழுதப் பெற்ற சீலைக்கும் பிறவற்றிற்கும் |