கிளவியாக்கம்77

எ-டு:மா பூத்தது. வினையான்   மரமென்பது   புலப்பட்டது   மாவும்
மருதும் ஓங்கின. இனத்தான் மரபென்பது புலப்பட்டது.  வேனில்  பிறந்தது
இனி மாவிற்குக் காவல் வேண்டும் என்புழிச்   சார்பால்   மரம்   என்பது
புலப்பட்டது. அக்காலத்து அது   பயன்   தருமாகலின்.   மா   பாய்ந்தது
(விலங்கு- வினை) மாவும் யானையும் தேரும்.   (இனம்)   கவசம்   பூண்டு
வந்தான் மாவைக் கொணர்க என்புழிச் சார்பு.  இனமாவது  இயற்கையானும்
செயற்கையானும் ஒரு  குழுவாய்   அமைதற்கு   இயைபுடைய   பொருள்.
சார்பாவது நிகழ்ச்சியானும் சூழலானும் ஒருவாற்றான் இயைபுடைய பொருள்.
 

இனி ஒன்றென முடித்தலான்   பாற்பொதுவாக   நிற்கும்   அஃறிணை
இயற்பெயர்களும் உயர்திணைப் பன்மைப்   பெயர்களும்   வேறுபடுவினை
முதலியவற்றான் ஒருபாலை வரைந்து சுட்டுதல் கொள்க.
 

எ-டு :இப்பெற்றம் உழுதது (ஆண்) இப்பெற்றம்   கறக்கும்   (பெண்).
இவ்யானை மதங்கொண்டது (ஆண்)  இவ்யானை   வயாவுற்றது   (பெண்)
இம்மக்கள் வேட்டையாடினர் (ஆண்) இம்மக்கள் கிள்ளை ஓப்பினர் (பெண்)
என வரும்.
 

சூ. 54 :

ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் 

வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் 

நினையுங் காலைக் கிளந்தாங் கியலும் 

[54]
 
க-து:

வினைவேறுபடாப்  பலபொருளொருசொல்  பொருளுணர்த்துமாறு
கூறுகின்றது. 

 

உரை :ஒன்றுபடும்  வினைப்பகுதியான்   பலவற்றொடும்   பொருந்தி
வரும் வினையான்   வேறுபடாத   பலபொருளொருசொல்   ஆராயுங்கால்
இதுவாவது இது என்று ஆங்குக் கிளக்கப்பட்டு வரும்.
 

"ஒன்று வினை மருங்கின்   ஒன்றித்   தோன்றும்"   என்பது   வினை
வேறுபடாப் பலபொருளொரு சொற்கு    அடையாய்   அதனை   விளக்கி
நின்றது.   இதனைத்    தனிச்    சூத்திரமாகக்    கொள்ளின்    அஃது
மாறுபடக்கூறலாய்     முடியுமென்க.     ஒன்றுவினை =    பொதுவினை.
அவையாவன: வளர்ந்தது,  வீழ்ந்தது,   இனிது,   பெரிது   என்றாற்போல
வருவன. கிளந்து கூறலாவது இன்னது என எடுத்து விளங்கக்கூறல்.
 

எ-டு :மரமா   வளர்ந்தது,   பரிமா    வளர்ந்தது,   முல்லைக்கொடி
அசைந்தது, மீன்கொடி அசைந்தது எனவரும். இனிப் பறவாக்