கிளவியாக்கம்79

ஒருபெயர்ப்பொதுச்சொல், வேறுவினைப்பொதுச்சொல்,  பல   பொருள்
ஒருசொல், விரவுப் பெயர்கள், விரவு வினைச்  சொற்கள்,  மரபுப்பெயர்கள்
ஆகியவை ஒரு பொருளை வரைந்துணர்த்தாமல் பொதுவாக வருவனவாகும்.
அவற்றுள் முன்னின்ற மூவகையும் மேல்  எடுத்தோதப்   பெற்றன. விரவுப்
பெயரும் விரவுவினையும் பின்னர்  அவ்வவ்வியலுட்  கூறப்பெறும். எஞ்சிய
மரபுப்பெயர் தொடர்மொழிக்கண் ஆக்கம்  பெறுமிடத்து அவை பொருளை
வரைந்துணர்த்துமாறு இச்சூத்திரத்தான் கூறப்பட்டது என்க.
 

பல பொருள் ஒரு சொல் அதிகாரப்பட்டமையின் பல் பொருட் பொதுப்
பெயரின் இயல்பினையும் முறையானே ஓதினார் என உணர்க.
 

இச்சூத்திரத்தின் பயனை  ஓராமல்    உரையாசிரியன்மார்   வடமொழி
மரபை உட்கொண்டு பொருள் கூறியுள்ளனர். அவர்  கூறிய   பொருண்மை
"செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்"   என்னும்   பொது   விதியானும்,
"ஆக்கந் தானே காரண முதற்றே" என்னும் சூத்திரத்தானும் பெறப்படும்.
 

சூ. 56:

குடிமை ஆண்மை இளமை மூப்பே 

அடிமை வன்மை விருந்தே குழுவே 

பெண்மை அரசே மகவே குழவி 

தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி 

காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல்என்று 

ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ 

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி 

முன்னத்தின் உணரும் கிளவி யெல்லாம் 

உயர்திணை மருங்கின் நிலையின வாயினும் 

அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும் 

(56)
 

க-து :

உயர்திணைப் பாங்கினவாய்வரும்  ஒருசார்   சொற்களைப்  பற்றிய
ஐயமகற்றுகின்றது. இஃது 'உயர்திணை   என்மனார்  மக்கட்சுட்டே'
என்னும் சூத்திரத்திற்குப் புறனடை. 
 

உரை :   குடிமை   முதலாக   விறற்சொல்   ஈறாகக்    கூறப்பெற்ற
அப்பதினெண்    சொற்களும்    உளப்பட    அவை   போல்வனபிறவும்
அவற்றொடுபொருந்தித்     தொக்குச்     சொல்லுவோன்   குறிப்பினான்
உயர்திணைப் பாங்கினவாய் நிலைபெற்றனவாயினும் அவை