அஃறிணையிடத்தவாய்க் கிளக்கப் பெற்று அஃறிணையாக நடைபெறும். என்றது : குடிமை முதலாயவை பொருளான் உயர்திணைப் பாங்கின எனினும் சொல்முடிபான் அஃறிணையாயே நிகழும் என்றவாறு. | இவற்றுள் குடிமை, விருந்து, அரசு, தன்மைதிரிபெயர், செறற்சொல், விறற்சொல் ஆகியவை உயர்திணைப் பொருட்குரிய பண்பாகலின் "உயர்திணை மருங்கின் நிலையின வாயினும்" என்றார். | ஆண்மை, இளமை, மூப்பு, வன்மை, குழு, பெண்மை, மக, குழவி, உறுப்பின் கிளவி, காதல், சிறப்பு ஆகியவை இரு திணைக்கும் பொதுவாயினும் சொல்லுவோன் குறிப்பினான், உயர்திணை மருங்கின் நிலை பெறுமாயின் அவற்றை உயர்திணைப் பண்பாக அறிதல் வேண்டுமென்பார் "முன்னத்தின் உணரும் கிளவி" என்றார். | குடிமையாவது சால்பு, இதனை மடிமை குடிமைக்கட் டங்கின் (குற-608) என்பதனான் அறிக. ஆண்மையாவது ஆளுந்தன்மை. இதனைப் பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு (மெய்-22) என்பதனான் அறிக. இளமை இளையாரையும், முதுமை முதியாரையும் கருதிவருதலை இளமைக்கு உலகியல் தெரியாது. மூப்பில்லா அவையில் முறையிட்டுப் பயனில்லை எனவரும் வழக்கியலானறிக. | அடிமை என்பது, அடிமைக்கு அரசாளும் உரிமையில்லை என வழங்குதலானறிக. இவ்வன்மைக்கு எதிர்நிற்பார் யார்? என வழங்கு தலானறிக. விருந்து என்பதும் உயர்திணைப் பண்பேயாம். அதனை விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (சிலம்பு 2-6-73) ' விருந்து புறத்ததாத் தானுண்டல்' (குறள்-82) என்பவற்றானறிக. | குழுவென்பது குழுவினரை உணர்த்தலை ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் என்பவற்றான் அறிக. பெண்மையாவது சாயல் (பெண்மைத் தன்மை) அஃது அதனை உடையாளைக் கருதி வருதலை "மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்" (குற-1137) என்பதனானறிக. அரசு என்பது அரசனை உணர்த்துவதை "மறனிழுக்கா மான முடைய தரசு" (குற-384) என்பதனானறிக. மகவு குழவி என்பவை உயர்திணைக்காதலைக் "குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே" (மரபி-23) என்பதனானறிக. தன்மைதிரிபெயர் என்றது ஆண் தன்மையும் பெண் தன்மையும் இல்லாத அலி. பொருளைப் பெயர் என்றார், முடிவு அதன் கண்ணதாகலின் உறுப்பின்கிளவி என்பது உறுப்பினைப் பற்றிய பண்பினை "ஊமை வந்தது, செவிடு வந்தது' |
|
|