சூ. 10 :சுட்டுப்பெயர் வினாப்பெயர்கள் - அவன் யாவன் போல்வன சுட்டிடைச்சொற்களும் வினா இடைச்சொல்லும் பால்காட்டும் ஈற்றெழுத்தொடு புணர்ந்த பின்னரே சுட்டுப்பெயர் வினாப்பெயர் என்பன ஆகும். ஆதலின் ஈற்றினின்றிசைக்கும் எழுத்துக்கள் சுட்டுப்பெயர் வினாப்பெயர்களோடு தோன்றும் எனல் பொருந்தாது. சுட்டுவினா இடைச்சொற்களொடு பாலறிய நிற்கும் எனலே ஏற்றது. (பக்-39)4 |
சூ. 6 :உயர்திணைக்கண் பெண்மையடுத்த இகர இறுதிப் பெயர்களாக 164ஆம் நூற்பா உரையுள் அடக்கப்பட்ட தலைவி தோழி செவிலி என்பன 6ஆம் நூற்பா உரையுள் விரவுப் பெயராகச் சுட்டப்பட்டுள்ளன (பக்-36)5 |
சூ. 18 :தகுதியும் வழக்கும் என்னும் நூற்பா உரையுள் சுட்டப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் யாவும் செய்யுள் வழக்குப் பற்றியவே. இவை பற்றிய செய்தி "முதலும் சினையும்என்று ஆயிரு பொருட்கும் நுதலிய மரபின் உரியவை உரிய" என்ற உவமவியல் 6ஆம் நூற்பாவில் குறிப்பிடப்படும் அதனை ஈண்டுக் கூறுதல் மிகைபடக் கூறலாம் (பக்-46)6 |
பெயர்நிலைக் கிளவியின் ஆகுந என்ற தொடர் மங்கல வழக்கைக் குறிக்கும் எனவும், குழூஉக்குறியைத் திசைநிலைக் கிளவியின் ஆகுந எனவும் கூறுதல் பற்றிய பொருத்தம் ஆராயத்தக்கது. (பக்-406). |
சூ. 19 :நிலம் வலிது வளி உளரும்-ஒருசார் வேற்றுமையையும் காலத்தையும் காட்டி நிற்றலின் பொருந்தாவாம் (பக்-49) ஐந்தாம் வேற்றுமைப் பொருளில் வரும் இற்று என்பதற்குத் தந்துள்ள எடுத்துக்காட்டுக்கள், இனியது வெய்யது என்றாற் போன்ற சொற்களே. அவை இத்தன்மைத்து என்ற பொருளைத் தருவனவே. எனவே நிலம் வலிது என்பது நிலம் வலிய தன்மைத்து என்னும் பொருளதே. |
இயற்கைப் பொருள் முக்காலத்தும் திரிபின்றி நிற்பது. எனவே அதனை முக்காலத்துக்கும் உரிய செய்யும் என்னும் |
|
4. சுட்டுப்பெயர் வினாப்பெயர்கள் நிறுத்தசொல்லும் குறித்துவருகிளவியு மாக வைத்துப் புணர்த்தல் கூடாமையின், அவை ஒருமொழியாக ஆக்கம் பெற்றவை என விளக்க வேண்டிற்று. |
5. அவை விரவும் பெயராதற்கும் ஏற்கும் என்பது கருதிக் கூறப்பட்டது. |
6. உவமவியலுள் கூறுவது விதி (இலக்கணம்) ஈண்டுத் 'தகுதியும் வழக்கும்' என்னும் நூற்பா 'செப்பினும் வினாவினும்' என்பதற்குப் புறனடை என்பது எனது கருத்து. |