வாய்பாட்டு வினைமுற்றால் குறிப்பதும் பொருத்தமானதே (பக்-117, 268)7
 

சூ. 20:'கல்விகற்றமையின்  அறிவு பெருகுதல் ஆயிற்று' இத்தொடரில்
வினையெச்சம்  பெருகல்  என்ற  தொழிற்பெயரைக்  கொண்டு  முடிகிறது.
ஆயிற்று  என்பது   ஆக்கச்சொல்.  வினையெச்சத்தை  முடிக்கும்  சொல்
சிறுபான்மை  ஆக்கச்சொல்  தொக்க   தொழிற்பெயராயிருக்கும்   (பக்-14)
அருந்திமகிழ்தல்  என்றாற்  போலத்  தொழிற்பெயரின்பின்  ஆக்கச்சொல்
குன்றிநிற்கும்  (பக்-396)  என்று பின்னும் முன்னும் குறிப்பிடுவதால், அறிவு
பெருகலாயிற்று     என்று    ஆக்கச்சொல்   புணர்த்ததன்     காரணம்
புலப்படவில்லை.8
 

சூ. 31, 32:யாது   என்பது    அறியாப்   பொருள்வயின்   செறியத்
தோன்றினும்  அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்த்தற்குத் தோன்றினும் அஃது
ஒன்றறி  கிளவியே என்பது தேற்றம். அங்ஙனமாக 'யாது' என்பது அறியாப்
பொருள்வயின்  வருமிடத்து   ஒருமை  பன்மை  தெற்றெனத்  தோன்றாத
பொருள்வயின்   வரும்    என்பதன்    பொருத்தம்    புலப்படவில்லை.
இப்பேழையில் உள்ள பொருள்கள் யாது என்று கூறலாமா? ஆண் மகனோ
பெண்டாட்டியோ  என்ற  ஐயம்  நிகழ்வுழிப்  பலர்  பாற்சொல்லால் சுட்டி
வினாதல் மரபு. அதுபோன்றதா யாது என்ற சொல்?.9
 

சூ. 26: "செவிசெஞ்சேவலும்   பொகுவலும்   வெருவர    வாய்வன்
காக்கையும் கூகையும்  கூடி" செஞ்செவிச்சேவல்,  வல்வாய்க் காக்கை எனச்
சுண்ணம்  என்னும்   பொருள்கோள்   வகையில்  மாற்றிக்கொள்ளப்படும்
என்றார் (பக்-55) சுண்ணமொழிமாற்று நூற்பா உரையுள் ஓரடிக்குள் ஏற்படும்
மொழி   மாற்றம்  சுண்ணமாகாது  எனவும்   பட்டாங்கமைந்த   நாற்சீரடி
இரண்டன்கண்  முதலடியில்   உள்ள  சொல்  அடுத்த  அடியில்   உள்ள
சொல்லொடு  சேர்ந்தே  சுண்ணமொழி  மாற்றினை அமைத்தல் வேண்டும்
எனவும்  குறிப்பிட்டுள்ளார். மேலும் 'வரையனைய' என்ற முதலடிச் சீரோடு
சேர்ந்த இரண்டாமடியுள்ள 'யானைக்கு' என்பது நிலை என்ற 


7. எடுத்துக்காட்டுக்கள்  மயக்கமின்றி  அமைதல்  நலம் என்பது கருதி
மறுத்துக் கூறப்பட்டது.
 

8. கோட்பாட்டுக் கட்டுரையில் விளக்கப்படும்.
 

9. ஒருமை,  பன்மையீறுகளின்றி  வினாவுமிடத்து யாது என்பது பொதுச்
சொல்லாக வருமென்பது எனது கருத்து.