எனவும் மலையின் வீழும் அருவி எனவும் வரும். பன்மை :- யானையிற் பலவாம் பரிமா எனவரும். சின்மை :- பரிமாவிற் சிலவாம் படைக்களிறு எனவரும். பற்று விடுதல் :- காமத்திற் பற்று விட்டான், மனைவாழ்க்கையிற் பற்று விட்டான் எனவரும். |
விடுதல் என வாளா கூறின் அஃது இரண்டாவதற்குரியதாமாகலின் பற்றுவிடுதல் என்றார். தீர்தலும் விடுதலும் ஒத்த பொருளினவாயினும் நீங்குதலும் நீக்குதலும் ஆகிய இட எல்லை வேறுபாடு பற்றி வேறோதினார் என்க. இவற்றுள் தீர்தலும் பற்று விடுதலும் நீக்கம் பற்றியும் ஏனைய உறழ்ச்சி பற்றியும் வந்தன. |
இனிக், காக்கையின் கரிது களம்பழம் என ஒப்புப்பொருள் கருதின் ஆண்டு இன் என்பது உவமஉருபாம். அவ்வழி அஃது இரண்டாம் வேற்றுமைக்குரிய பொருளாகும் என அறிக. இனி இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான், முயற்சியிற் பிறத்தலான் ஒலி நிலையாது என, ஏதுப் பொருள்பற்றி வருவனவற்றை ஈண்டுக் காட்டுதல் பிழை என உணர்க. |
'இன்' என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு, 'நின்று' என்னும் வினை எச்சச்சொல்லினைத் திரித்து ஆக்கிக் கொண்ட இடைச்சொல்லாகும். 'இன்' என்னும் மூன்றாம் வேற்றுமையின் மாற்றுருபு இதனான் என்னும் சொல்லின் சுருக்கமாகும். இன் என்னும் சாரியை இதன் என்னும் சொல்லின் மரூஉவாகும். 'இன்' என்னும் உவமஉருபு 'இன்ன' என்பதன் கடைக்குறை யாகும். ஆதலின் அவை வடிவத்தான் ஒன்றாக இருப்பினும் பொருள் வேறுபாடுடையவை என அறிக. |
சூ. 79 : | ஆறா குவதே |
| அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி |
| தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும் |
| அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. |
[18] |
க-து : | ஆறாம் வேற்றுமையாமாறு கூறுகின்றது. |
|
உரை :அது வெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் யாதொரு பெயரிடத்து வரினும் அஃது ஆறாம் வேற்றுமையாம். அது தன்னொடு ஒற்றுமைப்பட்ட பொருளானும் தன்னின் பிறிதாகிய பொருளானும் இப்பொருளினது இப்பொருள் எனச் சொல்ல நிற்கும் அத்தகைய பொருட்கிழமையை உடையது. |