120வேற்றுமையியல்

திரிந்தாகியதும்   என    ஐந்துவகைப்   படுமாறும்.  பிறிதின்   கிழமை :
பொருட்கிழமையும்      நிலக்கிழமையும்,       காலக்கிழமையும்   என
மூன்றுவகைப்படுமாறும் பிறவும் வருஞ்  சூத்திரத்தான் விரித்துக் கூறப்படும்.
எடுத்துக் காட்டுக்கள் ஆண்டுக் காட்டப்பெறும்.
 

'து'  என்னும் கிழமைப்  பொருள்தரும் குறிப்புரிச்சொல் ஒலிநயங்கருதி
அகரத்தொடு    சேர்ந்து  உருபிடைச் சொல்லாய் நின்றது என அறிக. 'து'
என்பது    உடைமைப்   பொருள்தருதல்   பற்றியே   அதனைக் குறிப்பு
வினைக்கண் இறுதி  இடைச்சொல்லாக நூலோர் அமைத்துக்   கொண்டனர்
என்க.
 

சூ. 80 :

இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்

செயற்கையின் முதுமையின் வினையின் என்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி யுறுப்பின் குழுவின் என்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கின் தோன்றுங் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்
[19]
 

க-து :

மேற்கூறிய   தற்கிழமை    பிறிதின்    கிழமைப்   பொருள்கள்
வகைப்படுமாறு விரித்துக் கூறுகின்றது. 
 

உரை :இயற்கை   முதல்   வாழ்ச்சி   ஈறாக   வருவனவும்  திரிந்து
வேறுபட்டு   வருவனவும்   அவை  போல்வன பிறவுமாய் மேற்கூறப்பட்ட
இலக்கணத்தான் தோன்றிவரும் பொருள்களும் ஆறாம் வேற்றுமைப்பாலான
எனக்கூறுவர் ஆசிரியர்.
 

திரிந்து   வேறுபடுதலாவது;  கோட்டது  நூறு  (கோடு = சங்கு; நூறு =
துகள்)   என்புழிக்   கோடே   துகளாக மாறி நிற்றலாம். இங்ஙனம் வடிவு
வேறுபடாமல் சாத்தனது செலவு  என  வினை முதலின் வேறுபாடாகவரின்
மெய்திரிந்தாய  தற்கிழமை  எனப்படும். மெய் திரிதல்-வடிவின்றிச் செயலும்
பண்புமாக நிற்றல்.
 

எ-டு :இயற்கை : இயல்பாகப் பெற்றிருக்கும்  தன்மை. அது, சாத்தனது
இயல்பு  -  நிலத்தது  வலிமை -  நங்கையது   நலம்   எனவரும்.  நலம்
செய்துகொள்ளப்பட்டதாயின்   செயற்கை  என்பதன்கண் அடங்கும். இஃது
ஒன்றியற்கிழமையாகிய தற்கிழமை.
 

உடைமை :    பிறர்க்கும்     பொதுவான    ஒன்றினைப்   பொருள்
முதலியவற்றான் தனக்குரிமையாகக் கொண்டிருத்தல் அது.