வேற்றுமையியல்121

சாத்தனது   பொருள்,   சாத்தனது ஆடை, சாத்தனது  குழை   எனவரும்,
இதனை       நிலைமையில்உடைமை      என்று     கூறுவர்.     இது பொருட்பிறிதின்கிழமை.
 

முறைமை : பிறப்புத்தொடர்பான்வரும்   உறவுரிமை. அது மறியது தாய்.
மறியது தந்தை. கன்றினது தாய் எனவரும். இது பொருட்பிறிதின் கிழமை.
 

கிழமை :  வரலாற்று    முறைமையான்    தொன்றுதொட்டு  ஒன்றற்கு
உரிமையாகிவரும்   பொருள்.  அது,  வேந்தனது  செங்கோல் - பாணரது
யாழ், முருகனது குறிஞ்சி நிலம், வெள்ளியது ஆட்சி  எனவரும். இவற்றுள்
முன்னைய இரண்டும் பொருட் பிறிதின் கிழமை -பின்னையது நிலப்பிறிதின்
கிழமை - வெள்ளியது ஆட்சி என்பது காலப்பிறிதின்கிழமை.
 

செயற்கை : தன்   முயற்சியான்     வளர்த்துக்    கொண்டதும்  ஒரு
காரணத்தான்    பெற்றதுமாம்.   அது   சாத்தனது  கற்றறிவு  - கபிலரது 
புலமை-அரசனதுமாண்பு-கம்பரது புகழ் எனவரும். இவை திரிபுபற்றி  வரும்
தற்கிழமை.
 

முதுமை  :  இயற்கையுள்  ஒரு  நிலைமையைக்  குறித்து நிற்கும். அது
சாத்தனது   முதுமை.  அறிவினது  முதிர்ச்சி  எனவரும். முதுமை என்பது
அதனாலாம்     பயனைச்  (அனுபவம்)  சுட்டி நிற்றலின் இயற்கையுள்ளும்
செயற்   கையுள்ளும்   அடக்கலாகாமைபற்றிப்   பிரித்துக்   கூறப்பட்டது.
தன்னினம்    முடித் தல்   என்னும்  உத்தியான் கொற்றனது இளமை என
இளமைப் பயன்கருதி  வருதலும் கொள்க. இது   தற்கிழமையுள்  ஒன்றியற்
கிழமையின் பாற்படும்.
 

வினை : ஒருபொருளின்  செயல்பற்றி  வருவது.  அது சாத்தனது நடை,
சாத்தனது  கூத்து - செலவு - பார்வை  என வரும். இது  மெய் திரிந்தாய
தற்கிழமை.
 

கருவி :   காரியத்திற்குத்    துணையாக    வருவது.  அது சாத்தனது
எழுதுகோல்  -   வனை    கலத்தது    திகிரி  எனவரும். இது பொருட் பிறிதின்கிழமை.
 

துணை :  ஒன்றனொடு   ஒன்றன்   இயைபுணரவருவது, அது அவனது இணக்கம் -  அவளது துணை -பெட்டையது துணை எனவரும் (துணைவன்
எனப்பால் தோன்ற   நிற்பின்  அவளுக்குத்   துணைவன் எனக் குவ்வுருபு
கொடுத்தல் வேண்டுமென்க) இது பொருட்பிறிதின் கிழமை.