128வேற்றுமையியல்

விரிக்குங்காலத்துப்   பல்லாறாகப்  பிரிந்து  பொருள்    ஒன்றாதற்கேற்பப்
பொருந்தி இசைக்கும் எல்லாச் சொற்களும் விரித்தற்குரியன என்று கூறுவர்
ஆசிரியர்.
 

தொகை   வயின்    வேற்றுமைப்  பொருளை விரிக்குங்காலை பிரிந்து
புணர்ந்து     இசைக்கும்    எல்லாச்   சொல்லும்  உரிய  எனக் கூட்டிக்
கொள்க.  விரிக்குங்காலை    என்றதனான்   அவை   தொக்கு  நின்றமை
பெறப்படும்.   வேற்றுமைப் பொருள்     என்றது,   வேற்றுமை  உருபும்,
பொருளும்  என்றவாறாம்.  ஈற்று   நின்றியலும்   தொகை என்றது ஈண்டு
வேற்றுமைத் தொகையை என்பது ஏற்புழிக் கோடலாற் கொள்க.
 

குழையணிந்த    செவி   என   உருபு   தொக்குப்  பொருள் விரிந்து
நிற்றலும்.   கரும்பிற்கு  வேலி  என  உருபு விரிந்து   பொருள்  தொக்கு
நிற்றலும்  ஆகிய    இரண்டும்     அடங்க    வேற்றுமைப்  பொருளை
விரிக்குங்காலை என்றார்.
 

அவை தாம், முன்மொழி நிலையலும் பின் மொழி நிலையலும்

இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்

அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்

அந்நான் கென்ப பொருள்நிலை மரபே

(எச்-23)
 

என்பதனான்   வேற்றுமைத்   தொகையின்  பொருள்நிலை முன்மொழி
நிலையல்   என்பது  பெறப்படும். முன்  என்றது  இடமுன். தொடரின்கண்
அஃது இறுதிநிலையாதலின் ஈற்று நின்றியலும் தொகை என்றார்.
 

வரலாறு  : குழைச்செவி   என்னும்    இரண்டாவதன்    தொகையை
விரிப்புழிக்    குழையை   அல்லது  குழையினை  உடைய செவி என்றும்,
அணிந்த செவி,  பூண்ட செவி,  ஏற்ற செவி  எனவும்,  மட்குடம் என்னும்
மூன்றாவதன்    தொகையை   விரிப்புழி  மண்ணானியன்ற  குடம், ஆகிய
குடம்,  பண்ணிய குடம்  எனவும். கரும்பு  வேலி  என்னும்  நான்காவதன்
தொகையை   விரிப்புழிக்,    கரும்பிற்கு  இட்ட  வேலி, அமைந்த வேலி,
நாட்டிய    வேலி,   கட்டிய  வேலி,   கோலிய வேலி,   சூழ்ந்த  வேலி,
எனவும்  மலையருவி   என்னும்   ஐந்தாவதன்    தொகையை  விரிப்புழி
மலையின் வீழ்  அருவி, மலையினின்று  விழும் அருவி,  வழியும்  அருவி
எனவும்  வரும். இனி,  மரக்கிளை   என்னும்    ஆறாவதன் தொகையை
விரிப்புழி  அஃது  பெயர்   கொண்டு முடியும் இயல்பினதாகலின் மரத்தது
கிளை,   மரத்தினுடைய   கிளை   என  உருபும் சொல்லுருபுமே விரியும்.
சாத்தனது பேச்சு, சாத்தனது நடை