சூ. 45:இனமானவற்றையே எண்ணுதல் வேண்டும் என்னும் விதியின்று என்கின்றார். எண் என்றா உறழென்றா ஆயிரண்டும் இனன் ஒன்றல் வேண்டும் என்ற விதியினைச் சான்றோர் பின்பற்றுதல் வெளிப்படை. இவ்வுரையாளர் காட்டியுள்ள எடுத்துக்காட்டும் இனமாயவற்றை எண்ணிய எடுத்துக்காட்டே.13 |
சூ. 50:தொடி சிலம்பு மகளிர்க்குரியன. தோள்வளை ஆடவர்க்குரியது. இஃதவர் ஏந்தியவாள். அஃது அவர் படைத்தடுத்த கிடுகு. இவர் துணங்கை யாடினார்-ஆடவரைச் சுட்டி நின்றது என்கின்றார். |
குறுந்தொடி கழிந்தகை சாபம் பற்றிக், கழல் தொடித் தடக்கை கலிமான் நள்ளி திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்-எனத்தொடியும் சிலம்பும் ஆடவர் அணிந்தவை. தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து-மாதவி அணிந்தது. பேய் மகள் நிணந்தின் வாயள் துணங்கை தூங்க-கேடகம் வாளொடு ஏந்தி......மாடத்து உச்சி நின்ற மலைமகள் என இவை மகளிர்க்கு வந்துள்ளன. எனவே இந்த எடுத்துக்காட்டுக்களின் பொருத்தம் ஆராய்தற்குரியது.14 |
சூ. 53:வேறுபடுதல் தன்வினை-வேறுபடூஉதல் பிற வினை. எழுதல்-எழூஉதல் போல. வேறுபடுத்தற்குரிய வினையை வேறுபடூஉ வினை என்று குறிப்பிடலாம் என்று தோன்றுகின்றது (பக்-76) |
சூ. 55:"குறித்தோன் கூற்றம்" இந்நூற்பாவின் கருத்து 'வினைவேறுபடூஉம்' என்றவினை 'வினைவேறுபடாஅ' என்ற நூற்பாக்களில் அடங்கியிருத்தலின் இதற்குத் தெய்வச்சிலையார் உரைக்கும் உரை பொருத்தமாகத் தோன்றுகிறது.15 |
சூ. 56:காதலுக்குரிய எடுத்துக்காட்டுக்கள் மயக்கந் தருவனவாக உள்ளன. 'பாவை-யானை' ஒப்புமை கருதாது |
|
13. இனமே என்னும் யாப்புறவு இல்லை. இமைல்லாதனவும் எண்ணப் படலாம் என்பதே கருத்து. |
14. தெய்வத்திற்கும்-தெய்வமொப்பக் கருதப்படும் அரசர்க்கும் விதி விலக்குண்டு. பெரும்பான்மை உலக வழக்குப்பற்றி இவ் எடுத்துக்காட்டுக்கள் தரப்பெற்றன. |
15. இந்நூற்பா மரபியலுட் கூறும் மரபுப்பெயர்களை நோக்கியது என்பது எனது கருத்து. |