132வேற்றுமை மயங்கியல்

மென்பார்     நிலைவினை    என்றார்.   முதல்    சினை    என்பவை
நியதியின்றித்   தடுமாறும்    இயல்பினவாதலின்   ஒன்றன்பாற்  படுதலை
நிலை  என்றார்.  இஃது  உருபும்  பொருளும்  உடன் மயங்கின மயக்கம்.
இஃது நிலை மொழி பற்றிய வரையறையாகலின் வேறு கூறினார்.
 

சூ. 86 :

கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே  
[3]
 

க-து :
 

இரண்டாவதனொடும் ஏழாவதனொடும் வருமொழித் தொழிற்சொல்
மயங்குமாறு கூறுகின்றது.
 

உரை :கன்றலும்   செலவும்   ஆகிய  தொழிற் சொற்கள் மேற்கூறிய
இரண்டு வேற்றுமைக் கண்ணும் ஒத்த வரவினவாம்.
 

எ-டு :சூதினைக்    கன்றினான்  -   சூதின்கட்  கன்றினான் எனவும்,
நெறியைச்    சென்றான்  -    நெறிக்கட்    சென்றான்   எனவும் வரும்.
கன்றுதல் - இவறுதல்.  சார்பென்    கிளவி   போலன்றி  இவை இரண்டு
வேற்றுமைக்கண்ணும் ஒத்த   வரவின   ஆதலின் 'சார்பென்   கிளவிக்கு'
என்பதன் பின்வையாது இதனை ஈண்டு வைத்தார்.
 

சூ. 87 :

முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை 

முதற்கண் வரினே சினைக்கு ஐவருமே  

[4]
 

க-து :
 

ஒரு   தொடரின்கண்   முதலும்   சினையும் ஒருங்கு வருதற்கண்
எய்தும் வேற்றுமை மயக்கம் ஆமாறு கூறுகின்றது.
 

உரை: முதலும் சினையும் ஒருங்குவரும் தொடரின்கண் ஆறாம் உருபு
முதற்பொருள் இடத்துவரின்  சினைக்  கிளவியினிடத்து  இரண்டாம் உருபு
வரும்.
 

எ-டு :யானையது   கோட்டைக்   குறைத்தான், மரத்தினது கிளையை
முரித்தான் எனவரும்.
 

சூ. 88 :

முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை 

சினைமுன் வருதல் தெள்ளி தென்ப  

[5]
 

க-து :

இதுவுமது. 
 

உரை :  மேற்கூறிய    முதற்சினைகிளவிகள்   அங்ஙனம்    ஒருங்கு
வருமிடத்து முதற்கிளவிக்கண் இரண்டாம் உருபு வரின் சினைக் கிளவிக்கண்
ஏழாவதன் உருபு வருதல் தெளிவுடையதாகும் என்று கூறுவர் ஆசிரியர்.