காதல்பற்றி வந்தன என்பது வடிவு ஒப்புமையையே உட்கொள்ளாது சிறப்பும் நலனும் இல்வழியும் தான் தன் மகளிடத்தும் மகனிடத்தும் கொண்டுள்ள பாசமே அடிப்படையாக இட்டுரைக்கும் இடுபெயராகும் என்பதே உரையாளர்களின் கருத்தாதலின் அவற்றைக் காதல் பற்றிய சொற்களுக்கு எடுத்துக்காட்டாகத் தருதலிற் சிதைவு ஏதுமில்லை எனலாம். யானை என்பது இடுபெயராதல் இவ்வுரையாளருக்கும் உடன்பாடே. (பக்-206) |
சூ. 57:காலம் உலகம் முதலிய சொற்கள் தெய்வம் சுட்டினும் பால்காட்டும் ஈற்றிடைச்சொல் பெறாமையின் சொல்லால் அஃறிணையாய் அஃறிணைமுடிபே கொள்ளும் என்பதே நூற்பாவின் கருத்து என்னும் உரைகாரர், தெய்வம்சுட்டிய பெயர் பால்காட்டும் ஈற்றிடைச்சொல் பெற்றாலன்றி உயர்திணை மருங்கின் இசையா என்று விளக்கம் கூற நூற்பாவில் இடமில்லை. அஃது அடுத்த இரு நூற்பாக்களின் செய்தியாகும் என்பது கருதப்படுகின்றது (பக்-82) |
சூ. 59.உலகினை நிலமகள் எனவும் சொல்லினை நாமகள் எனவும் முழுதுந்திரிந்த உயர்திணையாகக் கொள்பவர் உயிரினை உயிர்க்கிழவன் எனவும் உடம்பினை உடம்பார் அழியின் உயிரார் அழிவர் எனவும் ஞாயிற்றைப் பருதியஞ் செல்வன் எனவும் திங்களைத் திங்களஞ் செல்வன் எனவும் திரிந்த உயர்திணைப் பெயராகக் கொள்ளலாம் என்று குறிப்பிடாததன் காரணம் புலப்படவில்லை.16 |
சூ. 61.கண் தோள் முலை போல்வன கள் என்னும் இறுதி நிலை பெறாதவழி ஒருமை வினையாற் கூறுதல் வழாநிலையே என்பது உரையாளர் கருத்து (பக்-85) சங்க இலக்கியத்தில் கள் ஈற்றைப் புணர்த்துப் பன்மை கூறும் மரபு இன்று. கள் முதலியவை யாண்டும் பன்மைச் சொல்லாகவே கொள்ளப் பட்டுப் பன்மை வினையையே கொண்டுமுடிகின்றன. கேட்பினும் கேளாத்தகையவே...... செவி (குற-418) அமிழ்தின் இயன்றன தோள். 'பேதைக்கமர்த்தனகண்', எனக் கள்ளொடு சிவணாது கண், தோள், செவி முதலியன பன்மை வினையே |
|
16. 56, 57, 59 இவற்றின் உரை முன்னையோர் கருத்துக்களினின்று வேறுபட்டவை-விளக்கம் சாலாது போலும். சில முறை நோக்கின் தெளிவாகலாம். |